கனடாவில் சாலை விபத்தில் பலியான மற்றொரு இந்திய மாணவர் குறித்து வெளியாகியுள்ள துயர தகவல்
கடந்த வாரம் சாலை விபத்தில் பலியான இந்திய மாணவர்களில் ஒருவர், தனது படிப்பை முடிக்கும் தருவாயில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
சனிக்கிழமையன்று அதிகாலை 3.45 மணிக்கு, ஒன்ராறியோவின் நெடுஞ்சாலை 401இல், வேன் ஒன்றில் எட்டு பேர் பயணித்துக்கொண்டிருந்தபோது, அந்த வேன் மீது ட்ராக்டர் ஒன்று மோதி ஏற்பட்ட விபத்தில், Mohit Chauhan (23), Harpreet Singh (24), Jaspinder Singh (21), Karanpal Singh (22) மற்றும் Pawan Kumar (22) ஆகிய ஐந்து பேர் பலியாக, இரண்டு பேர் படுகாயமடைந்தார்கள்.
இந்நிலையில், Mohit Chauhan குறித்த துயர செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.
மொன்றியலிலுள்ள கல்லூரி ஒன்றில் வணிக மேலாண்மையில் பட்டயப்படிப்பு படித்துவந்த Mohit, தனது படிப்பை முடிப்பதற்கு இன்னும் ஒரு மாதமே இருந்த நிலையில்தான், சாலை விபத்தில் பரிதாபமாக பலியாகியுள்ளார்.
கடின உழைப்பாளியான Mohit உட்பட உயிரிழந்த அனைவருமே Brampton பகுதியில் தங்கியிருந்திருக்கிறார்கள். அங்கு இந்தியர்கள் அதிகம் வாழ்வதாலும், நல்ல வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என்பதாலும் அங்கு தங்கியிருந்துள்ளார்கள் அவர்கள்.
புதன்கிழமை வரை Bramptonஇல் வேலை செய்துவிட்டு, மாலை தன் சக மாணவர்களுடன் கிரேட்டர் ரொரன்றோவுக்கு புறப்படுவாராம் Mohit. வியாழனும் வெள்ளியும் கல்லூரி, இரவு அங்கு தங்கிவிட்டு மறுநாள் மீண்டும் வேலைக்காக Bramptonக்கு வரவேண்டும்.
இப்படி வாரந்தோறும் பயணம் செய்யவேண்டியிருப்பதால், அவர்களுக்கு கொஞ்சம் மலிவான போக்குவரத்து அந்த வேன்தான். ஷேர் ஆட்டோ போல அந்த வேனில் பயணிக்கும்போதுதான், திடீரென வேன் பழுதாகி நிற்க, ட்ராக்டர் ட்ரெய்லர் ஒன்று அதன் மீது மோத, Mohit உடபட ஐந்து பேர் பரிதாபமாக பலியாகியுள்ளார்கள்.
இந்த தகவலை அறிந்த அவர்கள் பயிலும் கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார்களாம். தற்போது அவர்கள் தங்கள் மாணவர்களின் உடல்களை இந்தியாவுக்கு அனுப்புவதற்காக நிதியுதவி செய்ய முன்வந்துள்ளார்களாம்.
படிப்பு ஒரு மாதத்தில் முடிந்துவிடும், ஒரு நல்ல வேலையைத் தேடிக்கொள்ளலாம், குடும்பத்தை முன்னேற்றிவிடலாம் என கனவு கண்டுகொண்டிருந்த Mohit மற்றும் அவரது நண்பர்களின் கனவு நிறைவேறாமலே போய்விட்டது துயரம்தான்...

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.
நன்றி நவிலல்
திருமதி சீதாலக்ஷ்மி அம்மாள் நடராஜா
பதுளை, அளவெட்டி, Düsseldorf, Germany, St. Gallen, Switzerland
31 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021
நன்றி நவிலல்
திரு சண்முகம் பாலசிங்கம்
வட்டுக்கோட்டை, காரைநகர் பாலக்காடு, Louvres, France, Dunstable, United Kingdom
26 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
Rev. அமரர். பத்மா சிவானந்தன்
சிங்கப்பூர், Singapore, அச்சுவேலி, Toronto, Canada, Victoria, Canada
24 Jun, 2021
மரண அறிவித்தல்
திருமதி சிவபாக்கியம் நாகலிங்கம்
Kuala Lumpur, Malaysia, கொக்குவில் கிழக்கு, Scarborough, Canada
21 Jun, 2022
மரண அறிவித்தல்
திரு கந்தையா ஞானேந்திரா
மலேசியா, Malaysia, இளவாலை, Florø, Norway, Enfield, United Kingdom
18 Jun, 2022