பிரான்சிலிருந்து உக்ரைனுக்குப் போரிடச் சென்ற தன்னார்வலர் குறித்து வெளியாகியுள்ள துயரச் செய்தி
பிரான்சிலிருந்து உக்ரைனுக்குப் போரிடச் சென்ற தன்னார்வலர் ஒருவர், போரில் கொல்லப்பட்டுவிட்டதாக பிரான்ஸ் தெரிவித்துள்ளது.
Kharkiv பகுதியில் நடந்த போரில் படுகாயமடைந்த அந்த பிரான்ஸ் நாட்டவர், பின்னர் காயம் காரணமாக உயிரிழந்துள்ளார்.
பிரெஞ்சுக் குடிமகன் ஒருவர் உக்ரைன் போரின் படுகாயமடைந்து உயிரிழந்ததைக் குறித்த துயரச் செய்தி தங்களை வந்தடைந்துள்ளதாக, பிரான்ஸ் வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உக்ரைன், போர் நடக்கும் ஒரு இடம் என்பதை அனைவருக்கும் நினைவூட்ட விரும்புகிறோம் என்று கூறிய அவர், ஆகவேதான் உக்ரைனுக்குப் பயணிப்பதற்கு எதிராக பிரான்ஸ் ஆலோசனை அளித்திருந்தது என்றார்.
ரஷ்யா உக்ரைனை ஊடுருவியதைத் தொடர்ந்து, உக்ரைன் ஜனாதிபதியான வோலோடிமிர் ஜெலன்ஸ்கி, வெளிநாட்டு வீரர்கள் போரில் பங்கேற்குமாறு அழைப்பு விடுத்திருந்ததைத் தொடர்ந்து பல வெளிநாட்டவர்கள் போரிடுவதற்காக உக்ரைன் சென்றிருந்தார்கள்.
இந்நிலையில், பிரான்சிலிருந்து சென்றிருந்த அந்த இளைஞர் Kharkiv பகுதியில் நடந்த போரில் கொல்லப்பட்டுள்ளார்.
உக்ரைன் போரில் உயிரிழந்த முதல் பிரெஞ்சு வீரர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.