இனி தெரியாத நபரிடம் வரும் அழைப்புகளை அடையாளம் காணலாம்! TRAI அறிவிப்பு
அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து அழைப்புகள் வரும்போது, அவர்களின் பெயரை தொடுதிரையில் காணலாம் என TRAI அறிவித்துள்ளது.
பெயரை அறியும் வசதி
செல்போன் பயனர்கள் தெரியாத நபரிடம் இருந்து அழைப்புகள் வரும்போது, குறித்த நபரை அடையாளம் காண True caller உள்ளிட்ட சில செயலிகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் எந்த செயலியின் உதவியும் இல்லாமல் அழைப்பவரின் பெயரை அறியும் வசதியை கொண்டுவர உள்ளதாக TRAI அறிவித்துள்ளது.
இன்னும் சில நாட்களில் இந்த வசதி அறிமுகமாக உள்ள நிலையில் TRAI இதுகுறித்து விளக்கம் தந்துள்ளது.
திரையில் தோன்றும் பெயர்
அதன்படி, நாம் Save செய்யாதவரிடம் இருந்து அழைப்பு வரும்போது, அவரின் பெயர் நம் திரையில் தோன்றுமாம்.
வருகிற 15ஆம் திகதி நாடு முழுவதும் இந்த சேவை நடைமுறைக்கு வர உள்ளது. நபர் ஒருவர் Simcard வாங்கும்போது கொடுக்கப்படும் தரவுகளின் அடிப்படையில், அழைப்பாளர்களின் பெயர்கள் போனின் திரையி தோன்றும்.
ஷவ்மி போன்ற ஒரு சில போன்களில் இந்த அம்சம் ஏற்கனவே உள்ள நிலையில், TRAI இதனை அனைத்து செல்போன் பயனர்களுக்கும் கிடைக்கப் பெற செய்ய உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |