பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது மோதிய ரயில்: 3 பேர் உயிரிழப்பு
மேக்கு வங்காளம் மாநிலத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது ரயில் மோதிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வேன் மீது மோதிய ரயில்
வெள்ளிக்கிழமை காலை மேற்கு வங்காள மாநிலம் முர்சிதாபாத் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற வேன் மீது பயணிகள் ரயில் மோதியதில் துயர சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்த கோரமான விபத்தில் 2 மாணவர்கள் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். காயமடைந்த பல மாணவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பெர்காம்பூரில் உள்ள கர்ணசுபர்ணா ரயில்வே கேட் பகுதியில் காலை 7 மணியளவில் இந்த மோதல் விபத்தானது நிகழ்ந்துள்ளது.
பள்ளி மாணவர்களை ஏற்றிக் கொண்டு வந்த வேன் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது நிம்திதா - கட்வா பயணிகள் ரயில் வேன் மீது மோதியது. மோதலின் தீவிரம் காரணமாக வேன் முற்றிலுமாக சிதைந்தது.
சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் விபத்து தொடர்பாக விசாரணையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.
ரயில்வே அதிகாரிகளின் அலட்சியம் மற்றும் கவனக்குறைவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |