அயர்லாந்தில் ரயில் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழப்பு
Train collided with car in Ireland 12 years old boy dead: அயர்லாந்தில் ரயில் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் உயிரிழந்துள்ளார்.
கார் மீது மோதிய ரயில்
அயர்லாந்தின் மேயோ(Mayo) கவுண்டியில் உள்ள ரயில் கடவு பாதையில்(level crossing) பயணிகள் ரயில் ஒன்று காருடன் மோதிய விபத்தில் 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.
நேற்று இரவு 9 மணிக்கு பாலிஹானிஸ்(Ballyhaunis) அருகே உள்ள கில்டிபோ(Kiltybo) பகுதி லெவல் கிராசிங்கில் இந்த விபத்து சம்பவமானது அரங்கேறியுள்ளது.
டப்ளின் ஹியூஸ்டனில் இருந்து வெஸ்ட்போர்ட் நோக்கிச் சென்ற ரயில் இந்த விபத்தில் சிக்கியுள்ளது.

12 வயது சிறுவன் உயிரிழப்பு
இந்த விபத்தில் 12 வயது சிறுவன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் காரை ஓட்டி வந்த 40 வயது மதிக்கத்தக்க நபர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதில் ரயிலில் பயணம் செய்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்பதும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |