இன்று முதல்... பிரித்தானியாவில் ரயில் பயணிகளுக்கு கூடுதல் சுமை: புதிய கட்டணங்கள் இன்னும் சிறிது நேரத்தில் அறிவிப்பு
இன்று முதல் பிரித்தானியாவில் ரயில் கட்டணங்கள் அதிகரிக்கப்பட உள்ளதால் பயணிகளுக்கு கூடுதல் சுமை ஏற்படும் நிலை உருவாகியுள்ளது.
இங்கிலாந்திலும் வேல்ஸிலும் ரயிலில் பயணம் செய்யும் பயணிகள், இன்று முதல் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணிக்கவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகியுள்ளார்கள்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ரயில் பயணிகளுக்கு ரயில் டிக்கெட் கட்டணம், 2.6 சதவிகிதம் அதிகரிக்கப்பட உள்ளது.
அதே நேரத்தில், ஸ்காட்லாந்தைப் பொருத்தவரை, கூட்டம் அதிகம் உள்ள நேரங்களில், ரயில் டிக்கெட் கட்டணம் 1.6 சதவிகிதமும், மற்ற நேரங்களில் 0.6 சதவிகிதமும் அதிகரிக்க உள்ளது.
உதாரணமாக, பிரைட்டன் முதல் லண்டன் வரையிலான ஆண்டு சீசன் டிக்கெட்டின் விலை 129 பவுண்டுகள் உயர்ந்து 5,109 பவுண்டுகளாக ஆக உள்ளது.
மான்செஸ்டர் முதல் கிளாஸ்கோ வரையிலான, கூட்டம் குறைவான நேர, ரிட்டர்ன் ரயில் டிக்கெட்டின் விலை 2.30 பவுண்டுகள் உயர்ந்து 90.60 பவுண்டுகள் ஆக உள்ளது.
இந்த ரயில் கட்டண உயர்வு, இல்லாத ரயில்களுக்கு பிரித்தானிய அரசு விலை நிர்ணயிப்பதாக விமர்சனத்தை உருவாக்கியுள்ளது.
கட்டண உயர்வு குறித்த முழுமையான விவரம், இன்னும் சிறிது நேரத்தில் வெளியாக உள்ளது.

