சுவிட்சர்லாந்தில் ரயில் பயணிகள் சந்தித்த திடீர் பிரச்சினை
சுவிட்சர்லாந்தில், நேற்று மாலை, ரயில் பயணிகள் பலர் எதிர்பாராத பிரச்சினை ஒன்றை சந்திக்க நேர்ந்தது.
என்ன காரணம்?
அதாவது, ரயில் நிலையங்களில் உள்ள பல அறிவிப்புப் பலகைகள் திடீரென வேலை செய்யவில்லை. சில பலகைகள் தவறான தகவல்களைக் காட்டின.
ஓவர்லோட்தான் இதற்குக் காரணம் என சுவிஸ்பெடரல் ரயில்வே தெரிவித்துள்ளது.
பிரச்சினை ஏற்பட்ட நேரத்தில், பயணிகள் தகவல்களைப் பெற ஆப்களை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டார்கள்.
மாலை சுமார் 5.00 மணியளவில் ஏற்பட்ட இந்த பிரச்சினை, 8.00 மணிவாக்கில் சீர் செய்யப்பட்டது.
image - Pixabay

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.