ஆல்ப்ஸ் மலையினூடே செல்லும் சுரங்க ரயில் பாதைக்குள் சிக்கிக்கொண்ட 600 பயணிகள்
ஆல்ப்ஸ் மலையினூடே செல்லும் சுரங்க ரயில் பாதை ஒன்றிற்குள் 600 பயணிகள் சிக்கிக்கொண்ட சம்பவம் நேற்று இரவு நடைபெற்றுள்ளது. நேற்று இரவு Gotthard சுரங்கப் பாதையில் ரயில் ஒன்று சென்றுகொண்டிருக்கும்போது, நடுவழியில் பழுதாகி நின்றுவிட்டது.
இதனால் சுமார் 600 பயணிகள் பாதிக்கப்பட்டார்கள். இரண்டு மணிநேரமாக ரயில் பழுதாகி நின்றதால், பயணிகளை ரயிலிலிருந்து இறக்கி, சுரங்கப்பாதைக்கு வெளியே நடத்தி அழைத்துவர முடிவு செய்யப்பட்டது. அதன்படி நடத்தி அழைத்துவரப்பட்ட பயணிகளுக்கு வேறு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டது.
ஆனால், பயணிகள் யாருக்கும் எந்த அபாயமும் ஏற்படவில்லை என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சுமார் 9.30 மணியளவில் ரயில் சேவை மீண்டும் சகஜ நிலையை அடைந்தது.
எதனால் இந்த பிரச்சினை ஏற்பட்டது என்பது தொடர்பாக விசாரணை ஒன்று துவக்கப்பட்டுள்ளது.