தூக்கத்தில் இருந்த மகளிடம் தந்தையின் கொடுஞ்செயல்: சுவிட்சர்லாந்தில் சம்பவம்
சுவிட்சர்லாந்தின் பெர்ன் மாநிலத்தில் சொந்த மகளை தன்பால் ஈர்ப்பாளர் எனக் கூறி தந்தை ஒருவர் கொலை செய்ய முயன்ற சம்பவம் தற்போது விசாரணைக்கு வந்துள்ளது.
கடந்த 2019 மே 29 திகதி இரவிலேயே குறித்த நடுக்கும் சம்பவம் நடந்துள்ளது. தூக்கத்தில் இருந்த Cataleya என்பவரை அவரது தந்தை வாய்க்குள் கத்தியை வைத்து அழுத்தியுள்ளதுடன் கொன்று விடுவதாக மிரட்டியுள்ளார்.
அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் தப்பிய Cataleya, தமக்கு நடந்த கொடூரத்தை நீதிமன்ற விசாரணையின் போது 2020 டிசம்பர் மாதம் வெளிப்படுத்தியுள்ளார்.
ஈராக்கிய வம்சாவளியை சேர்ந்த Cataleya தம்மை ஒரு திருநங்கையாகவே பாவித்து வருவதுடன், ஆணாகவே வாழ்ந்தும் வருகிறார். இந்த வழக்கின் முதல் விசாரணையின் போது, Cataleya தனக்கு தாமே காயப்படுத்தியிருக்கலாம் எனவும் அல்லது மூன்றாவது நபரால் தாக்கப்பட்டிருக்கலாம் எனவும் அந்த தந்தை நீதிமன்றத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அவரது வாதங்களை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவில்லை, என்றாலும் ஆதாரங்களின் அடிப்படையில் கொலை முயற்சி நடந்தது நிரூபணமானது.
மேலும், Cataleya-வின் போதை மருந்து பழக்கம், அவரது நடவடிக்கைகள், பாலினம் உள்ளிட்டவையே குற்றத்திற்கான மூலகாரணம் எனவும் ஐவர் குழு ஒன்று உறுதி செய்தது.
இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தந்தையை நிரபராதி என அறிவித்து விடுவிக்க வேண்டும் என்றே அவரது தரப்பு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்த வழக்கின் தீர்ப்பு விரைவில் வெளிவரும் என்றே அரசு தரப்பு சட்டத்தரணிகள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.