உங்களுக்கு சிகிச்சையளிக்க எனக்குத் தெரியாது: பிரான்சில் திருநங்கையை திருப்பி அனுப்பிய மருத்துவரால் சர்ச்சை
பிரான்சில் மகப்பேறு மருத்துவர் ஒருவர், திருநங்கை ஒருவருக்கு சிகிச்சையளிக்காமல் திருப்பி அனுப்பிய விடயம், மருத்துவ உலகில் கவனம் ஈர்த்துள்ளது.
உங்களுக்கு சிகிச்சையளிக்க எனக்குத் தெரியாது
26 வயது திருநங்கை ஒருவர், தனது ஆண் நண்பருடன் தென்மேற்கு பிரான்சிலுள்ள மகப்பேறு மருத்துவர் ஒருவரைக் காணச் சென்றுள்ளார்.
சிறிது நேரம் அவர் கிளினிக்கில் அமர்ந்திருந்த நிலையில், மருத்துவரின் செயலர் அவரிடம் வந்து, மருத்துவர் அவரை பார்க்கமுடியாது என்று கூறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
Canva
கோபமடைந்த அந்த திருநங்கை, நீங்களெல்லாம் மூன்றாம் பாலினத்தவர்கள் மீது வெறுப்புக்கொண்டவர்கள் என சத்தமிட்டபடி, முரட்டுத்தனமாக ரியாக்ட் செய்ததுடன், மருத்துவரின் செயலரையும் மோசமாக விமர்சித்துவிட்டு வெளியேறியுள்ளார்.
அந்த திருநங்கையின் ஆண் நண்பர், அந்த கிளினிக்கில் நடந்ததைக் குறித்து கிளினிக்கின் கூகுள் ரிவியூவில் புகார் தெரிவித்துள்ளார்.
மருத்துவர் அளித்துள்ள விளக்கம்
சம்பந்தப்பட்ட மருத்துவரின் பெயர் Dr.Victor Acharian. அந்த புகாருக்கு பதிலளித்துள்ள Dr.Victor, உண்மையான பெண்களுக்கு சிகிச்சையளிக்க மட்டுமே எனக்குத் தெரியும். ஒரு நபரின் உடலில் இனப்பெருக்க உறுப்புக்கு பதிலாக ஒரு துவாரம் மட்டுமே இருப்பதால், அவர் பெண்ணாகிவிடமுடியாது என்று கூறியுள்ளார்.
உருவாகியுள்ள சர்ச்சை
ஆனால், Dr.Victor அந்த திருநங்கைக்கு சிகிச்சையளிக்க மறுத்த விடயம் பிரான்சில் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. அந்த திருநங்கைக்கு ஆதரவாக, ஐரோப்பாவிலுள்ள பல அமைப்புகள் குரல் கொடுக்கத் துவங்கியுள்ளன.
உண்மை நிலை என்ன?
Dr.Victorஉடைய வார்த்தைகள் அந்த திருநங்கையைக் காயப்படுத்தியிருக்கலாம். ஆனால், ஒருவகையில் அவர் உண்மையைத்தான் கூறியிருக்கிறார். தனது 30 வருட மருத்துவ அனுபவத்தில் தான் சந்தித்த முதல் திருநங்கை இவர்தான் என்கிறார் அவர்.
???️⚧️ FLASH | Un gynécologue à #Pau a été accusé de transphobie après avoir refusé d'examiner une femme trans qui avait rendez-vous dans son cabinet.
— Cerfia (@CerfiaFR) September 13, 2023
? « Je n’ai aucune compétence pour m’occuper des hommes, même s’ils se sont rasé la barbe et viennent dire à ma secrétaire qu’ils… pic.twitter.com/kfQFkaT25a
எனக்கு உண்மையாகவே திருநங்கைகளுக்கு சிகிச்சையளிக்கத் தெரியாது. எனக்கு பெண்களுக்கு சிகிச்சையளிக்கத்தான் தெரியும் என்கிறார் அவர்.
பெண் என்பவள் வெறும் வெளித்தோற்றத்தில் மட்டும் ஆணிலிருந்து மாறுபடுபவள் அல்ல. அவளது உடலுக்குள் மறைந்திருக்கும் இனப்பெருக்க உறுப்புகளும் ஆணிலிருந்து மாறுபட்டவை.
Dr.Victor சொன்னதுபோலவே, பெண்ணின் உடலில் காணப்படும் பெண்ணுறுப்பு, உடலுக்குள் மறைந்திருக்கும் கருப்பையில் சென்று முடிவடைகிறது. அவள் உடலில் கருமுட்டைகளை உருவாக்கும் சூலகம் உள்ளது. இவையெல்லாம் திருநங்கைகளுக்குக் கிடையாது.
ஆக, மகப்பேறு மருத்துவர்களால் திருநங்கைகளுக்கு சிகிச்சையளிக்க முடியாது. அதற்கு அவர்களுக்கு படிப்போ பயிற்சியோ இல்லை.
இந்நிலையில், 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துவக்கி, பிரான்ஸ் பல்கலைக்கழகங்கள் திருநங்கைகளுக்கான உடல் நலம் குறித்த பயிற்சியை அளிக்கத் துவங்கியுள்ளன. எனவே, வருங்காலத்தில் திருநங்கைகளுக்கு சிகிச்சை கிடைக்க வாய்ப்புள்ளது என்று வேண்டுமானால் கூறலாம் என்பதுதான் இன்றைய நிதர்சனம்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |