பிரித்தானியர்களுக்கு இதற்கு கூட அனுமதியில்லை! விதிகள் தொடர்பில் தெளிவுப்படுத்திய பிரான்ஸ்
நாட்டிற்கு வரும் பிரித்தானியப் பயணிகளுக்கான விதிகள் தொடர்பில் பிரான்ஸ் அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவில் கொரோனா வேகமாக பரவிவருவதால் சனிக்கிழமை காலை முதல், அத்தியாவசிய காரணமின்றி பிரித்தானியாவுக்கு செல்வதற்கும் அங்கிருந்து வருவதற்கும் பிரான்ஸ் தடை விதித்துள்ளது.
பிரெஞ்சு குடிமக்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்கள் மட்டும் பிரித்தானியாவிலிருந்து பிரான்சுக்குத் திரும்பலாம் என்று பிரான்ஸ் அரசாங்கம் அறிவித்துள்ளது.
இந்நிலைியல், பிரித்தானியர்கள் பிரான்ஸ் வழியாக (சாலை மார்க்கமாக) மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கு செல்லக் கூட அனுமதியில்லை என அரசாங்கம் தெளிவுப்படுத்தியுள்ளது.
பிரித்தானியா பயணிகளுக்கு விமான நிலையத்தில் சர்வதேச மண்டலத்திற்குள் மட்டுமே போக்குவரத்திற்கு அனுமதிக்கப்படும் என்று பிரான்ஸ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
அதாவது, விமானம் மூலம் பிரான்ஸ் வரும் பிரித்தானியர்கள், விமான நிலையத்தில் சர்வதேச மண்டலத்திற்குள்ளே இருந்த படி, விமானம் மாறி மற்ற நாடுகளுக்கு செல்லலாம்.
பிரான்ஸ் வழியாக இத்தாலி, பெல்ஜியம், ஸ்பெயின், ஜேர்மனி அல்லது சுவிட்சர்லாந்திற்கு சாலை மார்க்கமாக செல்ல அனுமதியில்லை.
பிரித்தானியாவிலிருந்து வரும் ஐரோப்பிய ஒன்றிய நாட்டில் வசிப்பவர்களுக்கு மட்டும் பிரான்ஸ் வழியாக செல்ல அனுமதியளிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அவர்களும் முகவரிக்கான ஆதாரத்தைக் காட்ட வேண்டும் மற்றும் பரிசோதனைத் தேவைகளைப் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.