மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு மாறும் எம்பாப்பே? சந்தேகத்தை கிளப்பிய பதிவுகள்
PSG அணி வீரர் கைலியன் எம்பாப்பேவின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மொழிபெயர் என்பதை கிளிக் செய்யும்போது மான்செஸ்டர் யுனைடெட்டின் பெயர் தோன்றுவது சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
இரண்டு கோல்கள் விளாசிய எம்பாப்பே
லில்லி அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் பாரிஸ் செயிண்ட்-ஜேர்மைன் அணி 4-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் எம்பாப்பே அபாரமாக இரண்டு கோல்கள் அடித்து மிரட்டினார்.
@Christophe Ena-AP
மான்செஸ்டர் யுனைடெட்
இந்த நிலையில் சில நாட்களாக அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், எம்பாப்பே பதிவிடும் வார்த்தைகளை 'மொழி பெயர்' என கிளிக் செய்யும்போது மான்செஸ்டர் யுனைடெட் பாப் அப் உடன் செய்தி முற்றிலும் வேறொன்றாக மாறுகிறது.
இது பலருக்கும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அதாவது அவர் மான்செஸ்டர் அணிக்கு மாறுவாரா என்ற சந்தேகத்தை கிளப்பியுள்ளது.
ஒருவேளை எம்பாப்பே மான்செஸ்டர் யுனைடெட் அணிக்கு செல்லும் பட்சத்தில், நட்சத்திர வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் உடன் இணைந்து விளையாடுவது ரசிகர்களுக்கு பெரும் கொண்டாட்டமாக அமையும்.
@Getty Images