பிரித்தானியா போக்குவரத்து செயலாளருக்கு கொரோனா
பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
பிரித்தானியாவில் தீவிரமாக பரவி வந்த ஒமிக்ரான் மாறுபாடு தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது.
தொற்று விகிதங்கள் குறைந்து வருவதன் காரணமாக, பிரித்தானியாவில் அமுல்படுத்தப்பட்டிருந்து பிளான் பி கட்டுப்பாடுகள் அனைத்தும் சில தினங்களுக்கு முன் நீக்கப்பட்டது.
எனினும், பெருந்தொற்றை கட்டுப்படுத்த தடுப்பூசி பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதற்கிடையே, அண்மையில், பிரித்தானியா வெளியுறவுத்துறை செயலாளர் Liz Truss-க்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
தொற்றால் பாதிக்ப்பட்ட Liz Truss தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில், Liz Truss-ஐ தொடர்ந்து பிரித்தானியா போக்குவரத்து செயலாளர் கிராண்ட் ஷாப்ஸ் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார், அதை அவர் ட்விட்டரில் உறுதிப்படுத்தியுள்ளார்.
கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளதால், சுயமாக தனிமைப்படுத்திக் கொண்டு, தேவைக்கேற்ப பரிசோதனை செய்து வருகிறேன் என ஷாப்ஸ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
Have tested positive for #COVID19 so am self-isolating and testing as required.
— Rt Hon Grant Shapps MP (@grantshapps) February 4, 2022
வெளியுறவு செயலாளர் Liz Truss-ஐ தொடர்ந்து ஐந்து நாட்களுக்குள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இரண்டாவது அமைச்சரவை அமைச்சர் ஷாப்ஸ் ஆவார்.