சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்கும் பயணிகள் என்னென்ன பொருட்களை உடன் கொண்டு செல்லலாம்?
பிரெக்சிட்டுக்குப் பிறகு இது முதல் கிறிஸ்துமஸ்...
சுவிட்சர்லாந்து ஐரோப்பிய ஒன்றிய நாடு இல்லையென்றாலும், உணவுப்பொருட்களை இறக்குமதி செய்யும் விதிகளைப் பொருத்தவரை, சுவிட்சர்லாந்தையும் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுடன் இணைந்த நாடாகத்தான் கருத்தில் கொள்கிறது.
ஆகவே, இப்போது சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிக்கும் பயணிகள் தங்களுடன் என்னென்ன பொருட்களைக் கொண்டு செல்லலாம் என்று பார்க்கலாம்.
மாமிசம், மீன் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் பொருட்கள்
சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்கு செல்லும் பயணிகள், மாமிசம், மீன் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் பொருட்களை தங்களுடன் கொண்டு செல்வதற்கான விதிகள் சற்று நெகிழ்த்தப்பட்டுள்ளன.
அதில் கவனிக்கவேண்டிய விடயம் என்னெவென்றால், நீங்கள் பிரித்தானியாவுக்கு கொண்டு வரும் பொருட்கள் உங்கள் தனிப்பட்ட தேவைக்கானவையா என்பதுதான். அப்படி உங்கள் தனிப்பட்ட பயன்பாட்டுக்கான பொருட்களைக் கொண்டு வரும் பட்சத்தில், அதற்கு எந்த வரையறையும் கிடையாது. ஆனால், அதற்காக நீங்கள் 400 கிலோ சாசேஜ்களைக் கொண்டு வந்தால், உங்களிடம் கேள்விகள் கேட்கப்படும்.
நீங்கள் கொண்டு வரும் மாமிசம், மீன் மற்றும் விலங்குகளிலிருந்து எடுக்கப்படும் பொருட்கள் சுவிட்சர்லாந்து அல்லது ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நார்வே, ஐஸ்லாந்து, Liechtenstein, Faroe தீவுகள் மற்றும் கிரீன்லாந்து ஆகிய நாடுகளிலிருந்து கொண்டுவரப்படும் பட்சத்தில், அவற்றை நீங்கள் தாராளமாக கொண்டு வரலாம்.
மதுபானங்கள்?
நீங்கள் சுவிஸ் மதுபானங்கள் சிலவற்றை பரிசுப்பொருட்களாக உங்கள் குடும்பத்தினருக்கோ, நண்பர்களுக்கோ கொடுப்பதற்காக சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வர விரும்பினால், நீங்கள் கொண்டு வரலாம். ஆனால், எவ்வளவு மதுபானத்தை சுவிட்சர்லாந்திலிருந்து பிரித்தானியாவுக்குக் கொண்டு வரலாம் என்பதில் சில வரையறைகள் உள்ளன என்பதை அறிந்து அதன்படி செயல்படுவது நல்லது.