பிரித்தானியாவில் பயண இடையூறு, மின்வெட்டு: விடுக்கப்பட்ட அம்பர் எச்சரிக்கை
பனிப்பொழிவு மற்றும் கடும் குளிர் காரணமாக பயண இடையூறு ஏற்பட அதிக வாய்ப்பிருப்பதாக கூறி அம்பர் எச்சரிக்கை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம்.
இங்கிலாந்தின் வடபகுதி
கடும் பனிப்பொழிவு காரணமாக பயண இடையூறு மட்டுமின்றி மின்வெட்டுக்கும் அதிக வாய்ப்பிருப்பதாக கூறுகின்றனர். இந்த புதிய எச்சரிக்கையானது இங்கிலாந்தின் வடபகுதியை அதிகமாக பாதிக்கும் என்றே கூறப்படுகிறது.
@reuters
சமீப நாட்களாக நாடு முழுவதும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சாலையை பயன்படுத்துவோருக்கு இது உகந்த தருணம் அல்ல எனவும் வானிலை ஆய்வு மைய அதிகாரி நீல் ஆம்ஸ்ட்ராங் எச்சரித்துள்ளார்.
பிரித்தானியாவில் உறையவைக்கும் மழை என்பது மிக அரிதான ஒன்று என குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பயண இடையூறு ஏற்படுவதும் முன்வெட்டும் எதிர்பார்க்கலாம் என்றார்.
அம்பர் எச்சரிக்கை
அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள பகுதிகளில் உறையவைக்கும் மழை காரணமாக 2-3 மி.மீ ஐஸ் காணப்படலாம் எனவும், இது பயணத்தை சிக்கலுக்குள்ளாக்குவதும், சாலைகளை மூடும் நிலையும் உருவாக்கும் என்றார்.
@PA
மேலும், இங்கிலாந்தின் தெற்கு மற்றும் தென்மேற்குப் பகுதிகளிலும், தெற்கு வேல்ஸ் பகுதியிலும் மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கையானது ஞாயிற்றுக்கிழமை பிற்பகுதியில் இருந்து செவ்வாய்கிழமை வரை அமுலில் இருக்கும் எனவும்,
டார்ட்மூரில் 150 மிமீக்கு மேல் மழை பெய்யக்கூடும் எனவும், ஆனால் எச்சரிக்கை விடுக்கப்பட்ட பகுதிக்குள் பரவலாக 30-80 மிமீ மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவித்துள்ளனர்.