இன்று முதல் நெகிழ்த்தப்படும் கனடா பயண கட்டுப்பாடுகள் ... சிலருக்கு மட்டும்!
கனடா, இன்று முதல் சிலருக்கு மட்டும் சில பயணக்கட்டுப்பாடுகளை நெகிழ்த்தியுள்ளது.
இன்று முதல் கனடாவுக்குள் நுழைவோருக்கு நெகிழ்த்தப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் கொண்டவர்களுக்கு மட்டுமே!
அதன்படி, கனடாவால் அங்கீகரிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களுக்கு மட்டும் கனடாவுக்குள் நுழையும்போது ஹொட்டல் தனிமைப்படுத்தல் கிடையாது.
இந்த விதிவிலக்கு யாருக்கெல்லாம் என்றால், கனேடிய குடியுரிமை அல்லது நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர்கள், அவர்களது நெருங்கிய குடும்ப உறுப்பினர்கள் மற்றும் தாத்தா பாட்டி, அத்தை, மாமா போன்ற உறவினர்கள், செல்லுபடியாகத்தக்க கல்வி உரிமம் வைத்திருக்கும் சர்வதேச மாணவர்கள், செல்லுபடியாகத்தக்க பணி உரிமம் வைத்திருக்கும் சில தற்காலிகப் பணியாளர்கள் ஆகியோர் ஆவர்.
இந்தியாவைப் பொருத்தவரை, கனடாவுக்கு செல்லும் நேரடி விமானங்களுக்கு ஜூலை 11 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இன்னொரு நாடு வழியாக கனடா செல்வோர், கனடாவுக்கு புறப்படும் முன், எந்த நாட்டிலிருந்து புறப்படுகிறார்களோ, அந்த நாட்டில் மேற்கொண்ட, செல்லுபடியாகத்தக்க பரிசோதனை ஒன்றில் தங்களுக்கு கொரோனா இல்லை என்பதற்கான ஆவணத்தை சமர்ப்பிக்கவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்களுக்கு...