பிரான்சில் அமுலுக்கு வரும் புதிய விதி! வெளியான முக்கிய அறிவிப்பு
பிரான்ஸில் புதிய பயண விதிகள் அமுல்படுத்தப்படும் என European Affairs Minister Clement Beaune அறிவித்துள்ளார்.
ஜூன் 9ம் திகதி முதல் புதிய விதிகள் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய விதிகளின் படி, கொரோனா ஆபத்து நிலை ‘ஆரஞ்சு’ என மதிப்பிடப்பட்ட பிரித்தானியா மற்றும் அமெரிக்க போன்ற நாடுகளிலிருந்து பிரான்ஸ் வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் மற்றும் கொரோனா இல்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சோதனை முடிவை வழங்க வேண்டும் என Clement Beaune அறிவித்துள்ளார்.
‘ஆரஞ்சு’ என மதிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போடாத பயணிகள், தாங்கள் மிக முக்கியமான காரணத்திற்காக பிரான்ஸ் பயணிக்கிறார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும் மற்றும் கொரோனா இல்லை என சமீபத்தில் எடுக்கப்பட்ட சோதனை முடிவை வழங்க வேண்டும்.
பிரான்ஸால் பச்சை அல்லது சிவப்பு என மதிப்பிடப்படாத அனைத்து நாடும் ஆரஞ்சு என வகைப்படுத்தப்படும் என Beaune குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா ஆபத்து நிலை ‘பச்சை’ என்று பிரான்ஸால் மதிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து வரும் பயணிகள் தடுப்பூசி போட்டிருந்தால் எளிதாக நாட்டிற்குள் நுழையலாம்.
தடுப்பூசி போடவில்லை என்றால், பிரான்ஸ் நாட்டிற்குள் நுழைய சமீபத்திய எடுக்கப்பட்ட கொரோனா இல்லை என்ற சோதனை முடிவு தேவைப்படும்.
பிரான்ஸின் பச்சை பட்டியலில் குறிப்பாக அவுஸ்திரேலியா, தென் கொரியா, இஸ்ரேல், ஜப்பான், லெபனான், நியூசிலாந்து மற்றும் சிங்கப்பூர் உட்பட அனைத்து ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாடுகளும், வைரஸ் கட்டுப்பாட்டில் இருப்பதாக கருதப்படும் பல நாடுகளும் உள்ளது.
தென் ஆப்பிரிக்கா, அர்ஜென்டினா, பிரேசில், இந்தியா மற்றும் துருக்கி உள்ளிட்ட சிவப்பு என மதிப்பிடப்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் தடுப்பூசி போட்டாலும் இல்லாவிட்டாலும் மிக முக்கியமான காரணத்திற்காக மட்டுமே பிரான்சுக்குள் நுழைய முடியும்.
சிவப்பு அல்லது ஆரஞ்சு என மதிப்பிடப்பட்ட நாடுகளிலிருந்து இருந்து வந்தாலும் கூட, பிரான்ஸ் குடிமக்கள் நாட்டிற்குள் நுழைய கொரோனா சோதனை மட்டும் எடுக்க வேண்டியிருக்கும் என்று Beaune கூறினார்.