சுவிஸ் கோவிட்-19 சான்றிதழை இனி வெளிநாட்டவர்களும் பெறலாம்! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட அரசாங்கம்
ஐரோப்பிய ஒன்றியம் அல்லது ஷெங்கன் பகுதிக்கு வெளியே உள்ள நாடுகளிலிருந்து வரும் மூன்றாம் நாட்டு குடிமக்கள் ஸ்விட்சர்லாந்தின் கோவிட் -19 சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம் என சுவிஸ் அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், கோவிட் -19 சான்றிதழை பெறுவதற்கு தகுதிபெற, விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு கோவிட் -19 நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்டிருப்பதை நிரூபிக்க வேண்டும்.
அதிலும், ஐரோப்பிய மருந்து நிறுவனத்தால் (European Medicines Agency) அங்கீகரிக்கப்பட்டுள்ள BioNTech, Moderna, Johnson & Johnson ஆகிய தடுப்பூசிகளை மட்டுமே பெற்றிருக்கவேண்டும்.
"வெளிநாட்டு தடுப்பூசி சான்றிதழ்களை (EMA தடுப்பூசிகள்) சுவிஸ் கோவிட் சான்றிதழாக மாற்றுவதற்கான தேசிய மற்றும் மின்னணு தீர்வு அக்டோபர் 19, 2021 முதல் செயல்பாட்டில் உள்ளது" என்று சுவிட்சர்லாந்து சுற்றுலா அறிக்கை கூறுகிறது.
தடுப்பூசி தேவையை பூர்த்தி செய்வதைத் தவிர, மூன்றாம் நாடுகளைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் தங்கள் தடுப்பூசி பாஸ்போர்ட் மாற்றத்தை முடிக்க பின்வரும் அனைத்து தகவல்களையும் வழங்க வேண்டும்:
1- பாஸ்போர்ட் நகல் மற்றும் அடையாள அட்டை உட்பட குடியுரிமை அல்லது அவர்களின் குடியிருப்பு நிலை
2- விரிவான விளக்கம் உட்பட தடுப்பூசி உறுதிப்படுத்தல்
3- சுவிட்சர்லாந்தில் இருக்கும்போது வருகைக்கான காரணம், காலம் மற்றும் தங்கியிருக்கும் இடம்
4- விமான டிக்கெட் அல்லது overnight reservation போன்ற சுவிட்சர்லாந்திற்கு நுழைவதற்கான ஆதாரம்
மேலும், தேவையான அனைத்து ஆவணங்களும் ஜேர்மன், பிரஞ்சு, இத்தாலியன் அல்லது ஆங்கிலத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும். பிற மொழிகளில் வழங்கப்பட்ட ஆவணங்கள் ஏற்கப்பதுவதில்லை.
சுவிட்சர்லாந்தின் சுற்றுலா அதிகாரப்பூர்வ பக்கத்தால் வழங்கப்பட்ட தரவுகளின்படி, விண்ணப்பதாரர்கள் தங்கள் சான்றிதழை மாற்றுவதற்கு CHF 30 (€ 28) தொகையை செலுத்த வேண்டும், அதை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது நேரடியாக கோவிட் -19 சான்றிதழ் பயன்பாட்டிற்கு நகர்த்தலாம்.
விண்ணப்ப செயல்முறை முடிந்தவுடன், விண்ணப்பதாரர்கள் தங்கள் சுவிஸ் கோவிட் சான்றிதழைப் பெறுவதற்கு ஐந்து நாட்கள் வரை காத்திருக்க வேண்டும்.
கூடுதலாக, அக்டோபர் 24 ஞாயிற்றுக்கிழமை வரை, ஒரு தற்காலிக தீர்வாக, மனிதனால் படிக்கக்கூடிய அனைத்து சான்றிதழ்களும் (All human-readable certificates) உட்புறப் பகுதிகளுக்கு அணுகுவதற்கு செல்லுபடியாகும். இருப்பினும், அக்டோபர் 25 திங்கள் முதல் இந்த இடைக்கால தீர்வு பொருந்தாது என சுவிட்சர்லாந்து சுற்றுலா குறிப்பிட்டுள்ளது.
EMA ஆல் அங்கீகரிக்கப்படாத தடுப்பூசிகள் மூலம் நோய்க்கு எதிராக தடுப்பூசி போடப்பட்ட மூன்றாம் நாட்டுப் பயணிகளைப் பற்றி, அதிகாரிகள் தங்களின் சான்றிதழை மாற்ற தற்போது விருப்பம் இல்லை என்பதால் அவர்கள் இன்னும் உட்புற இடங்களை அணுக அனுமதிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர்.
முன்னதாக, சுவிட்சர்லாந்து அதிகாரிகள் நாடு முழுவதும் பயணிகள் உட்பட முழுமையாக தடுப்பூசி போடப்படாதவர்களுக்கு இலவச COVID-19 சோதனைகளை வழங்காது என்று அறிவித்தனர்.
அக்டோபர் இறுதி வரை 16 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் ஓரளவு தடுப்பூசி போடப்பட்டவர்கள் மட்டுமே இலவச பரிசோதனை திட்டத்தில் தொடர்ந்து பயனடைவார்கள்.