பிரான்ஸ் வரும் சர்வதேக பயணிகளுக்கு புதிய விதி அறிமுகம்!
ஒமைக்ரான் பரவல் காரணமாக பிரான்ஸ் வரும் சர்வதேச பயணிகளுக்கு புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
பிரான்ஸுக்குப் பயணிப்பவர்கள் கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற பரிசோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.
அதாவது, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு வெளியில் இருந்து வரும் அனைவரும் முழுமையாக தடுப்பூசி போட்டிருந்தாலும், 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து வரும் தடுப்பூசி போடப்படாத நபர்கள், 24 மணிநேரத்திற்குள் எடுக்கப்பட்ட கொரோனா தொற்று பாதிப்பு இல்லை என்ற சோதனை முடிவை சமர்ப்பிக்க வேண்டும்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் இந்த விதியை அமுல்படுத்த பிரான்ஸ் அரசாங்கம் பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மிகவும் கடுமையான கட்டுப்பாடுகளின் கீழ் தென் ஆப்பிரிக்காவில் இருந்து வரும் விமானங்கள் சனிக்கிழமை முதல் மீண்டும் போக்குவரத்தை தொடங்கலாம் என்றும் பிரான்ஸ் அறிவித்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவிலிருந்து வரும் அனைத்து பயணிகளுக்கும் கட்டாய சோதனை மற்றும் தனிமைப்படுத்தல் உட்பட மிகவும் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.