இணையத்தில் தகவல்கள்... ஐரோப்பாவில் ரயில் பயணிகளின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்ய கோரிக்கை

Passport Europe
By Arbin Apr 23, 2026 10:40 PM GMT
Report

ஐரோப்பா முழுவதும் உள்ள சுற்றுலாப் பயணிகள், தங்கள் தனிப்பட்ட தரவுகள் டார்க் வெப்'பில் (Dark Web) வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கடவுச்சீட்டுகளைப் பெறுவதில் ஏற்படும் மன உளைச்சலையும் செலவுகளையும் எதிர்கொண்டு வருகின்றனர்.

கடவுச்சீட்டு

இன்டர்ரெயில் நிறுவனமான யூரைல் (Eurail) ஹேக் செய்யப்பட்ட நிலையில் இந்த சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இணையத்தில் தகவல்கள்... ஐரோப்பாவில் ரயில் பயணிகளின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்ய கோரிக்கை | Travellers Told Cancel Passports

கடந்த டிசம்பர் மாதத்தில், 300,000-க்கும் மேற்பட்ட ஐரோப்பியப் பயணிகளின் கடவுச்சீட்டு இலக்கம், பெயர்கள், தொலைபேசி இலக்கம், மின்னஞ்சல் மற்றும் வீட்டு முகவரிகள், பிறந்த திகதிகள் உள்ளிட்ட தனிப்பட்ட தரவுகள் அனைத்தும் திருடப்பட்டன.

ஆனால் இந்த வாரம், பாதுகாப்பு நடவடிக்கையின்போது நகலெடுக்கப்பட்ட தரவுகள் 'டார்க் வெப்'பில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாகவும், அதன் மாதிரித் தரவுத் தொகுப்பு ஒன்று டெலிகிராமில் வெளியிடப்பட்டுள்ளதாகவும் Eurail தனது வாடிக்கையாளர்களுக்குத் தெரிவித்தது.

இந்த அறிவிப்பு மீண்டும் கோபத்தையும் குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மோசடி நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்படுவதைத் தடுக்கும் பொருட்டு, தங்கள் கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன், குறைந்தது ஒரு வாடிக்கையாளர் அணுகியுள்ளதாக பிரித்தானியாவின் கடவுச்சீட்டு அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஹார்முஸ் நீரிணையில்... அந்தப் படகுகளைக் கண்டதும் சுட உத்தரவிட்ட ட்ரம்ப்

ஹார்முஸ் நீரிணையில்... அந்தப் படகுகளைக் கண்டதும் சுட உத்தரவிட்ட ட்ரம்ப்

இதனையடுத்து மாற்றுக் கடவுச்சீட்டுக்கான முழு 102 பவுண்டுகள் கட்டணத்தையும் அவர்கள் செலுத்த வேண்டும் என்று உள்விவகார அமைச்சகத்தின் முகமையும் குறிப்பிட்டுள்ளது.

டென்மார்க்கில் பாதிக்கப்பட்ட மற்றொரு வாடிக்கையாளர், தங்களது கடவுச்சீட்டை ரத்து செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும், புதிய கடவுச்சீட்டைப் பெற 200 பவுண்டுகளுக்கும் அதிகமாக செலவாகும் என்றும் கூறியுள்ளார்.

இணையத்தில் தகவல்கள்... ஐரோப்பாவில் ரயில் பயணிகளின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்ய கோரிக்கை | Travellers Told Cancel Passports

ஆனால் பலர் புதியக் கடவுச்சீட்டுக்காக 100 பவுண்டுகளுக்கு மேல் செலவிட வேண்டும் என்பதில் கவலை தெரிவித்துள்ளதுடன், தரவுகள் திருடப்பட்டுள்ள நிலையில் புதிய கடவுச்சீட்டு பெறுமாறு உத்தியோகப்பூர்வ அறிவுரை இருந்தால், அதற்கு ஏதேனும் ஒரு வகையான இழப்பீடு வழங்கப்படத்தான் வேண்டும் எனவும் வாதிட்டுள்ளனர்.

யூரேல்

யூரேல் என்பது ஐரோப்பா முழுவதும் 33 நாடுகளில் மக்கள் விடுமுறைக்காகப் பயன்படுத்தும் இன்டர்ரெயில் பாஸ்களை விற்கும் ஒரு டச்சு நிறுவனம் ஆகும்.

நார்வேயின் வடமுனையிலிருந்து துருக்கியின் தென்கடற்கரை வரை இரயில் பயணம் செய்ய அனுமதிக்கும் ஏழு நாள் பயணச்சீட்டின் விலை, 28 வயது வரை உள்ளவர்களுக்கு 286 யூரோ ஆகும்.

28 முதல் 59 வயது வரையில் 381 யூரோ வசூலிக்கின்றனர். 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு 343 யூரோ கட்டணமாக வசூலிக்கின்றனர். இதில் 12 வயதுக்கு உட்பட்ட இரு பிள்ளைகளை தந்தை அல்லது தாயார் கட்டணமின்றி அழைத்துச் செல்லலாம்.

இணையத்தில் தகவல்கள்... ஐரோப்பாவில் ரயில் பயணிகளின் கடவுச்சீட்டுகளை ரத்து செய்ய கோரிக்கை | Travellers Told Cancel Passports

இதனிடையே, தனிப்பட்ட தகவல்களைக் கோரும் எதிர்பாராத அல்லது சந்தேகத்திற்கிடமான தொலைபேசி அழைப்புகள், மின்னஞ்சல்கள் அல்லது குறுஞ்செய்திகள் குறித்து கூடுதல் விழிப்புடன் இருக்குமாறு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களை யூரேல் இந்த வாரம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும், Rail Planner செயலியை அணுக அவர்கள் பயன்படுத்தும் கடவுச்சொல்லைப் புதுப்பிக்கவும், மின்னஞ்சல், சமூக ஊடக மற்றும் வங்கி கடவுச்சொற்களை மாற்றவும் கோரியுள்ளது.

பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களுக்குத் தெரிவிக்கும் பணி இன்னும் நடைபெற்று வருவதாகவும், ஆனால் டெலிகிராமில் வெளியிடப்பட்ட மாதிரித் தரவுத் தொகுப்பில் விவரங்கள் இடம்பெற்றிருந்த அனைவருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுவிட்டதாகவும் யூரேல் நிறுவனம் கூறியது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள்.
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
9ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, வெள்ளவத்தை, குருநாகல், புத்தளம், மட்டக்களப்பு, அநுராதபுரம்

02 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Epinay, France

01 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

சரவணை கிழக்கு, Scarborough, Canada

14 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, உடுவில், கொழும்பு, Toronto, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Le Raincy, France

28 Jun, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்
நன்றி நவிலல்
நன்றி நவிலல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கண்டாவளை

27 Jun, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Selly Oak, United Kingdom

01 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன், Wil, Switzerland

16 Jun, 2022
மரண அறிவித்தல்

புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
10ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US