ஆஷஸ் கடைசி டெஸ்ட்: 166 பந்துகளில் 163 ரன் விளாசிய ஹெட்..இங்கிலாந்திற்கு தரமான பதிலடி
இங்கிலாந்து அணிக்கு எதிரான ஆஷஸ் டெஸ்டில் அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் 163 ஓட்டங்கள் விளாசினார்.
டிராவிஸ் ஹெட் அதிரடி சதம்
சிட்னியில் நடந்து வரும் ஆஷஸ் கடைசி டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை ஆடி வருகிறது.
Travis Head has his first Test century at the SCG and his third of the series!#Ashes | #PlayoftheDay | @nrmainsurance pic.twitter.com/U3jcL2cRde
— cricket.com.au (@cricketcomau) January 5, 2026
வெதரால்ட் 21 ஓட்டங்களிலும், லபுஷேன் 48 ஓட்டங்களிலும் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
90 பந்துகளில் 24 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் மைக்கேல் நேசர் ஆட்டமிழக்க, மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடி சதம் கடந்தார். அவர் 166 பந்துகளில் 1 சிக்ஸர், 24 பவுண்டரிகளுடன் 163 ஓட்டங்கள் விளாசி அவுட் ஆனார்.
தற்போது வரை அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட்கள் இழப்பிற்கு 440 ஓட்டங்கள் (107 ஓவர்கள்) எடுத்துள்ளது. ஸ்டீவன் ஸ்மித் 95 ஓட்டங்களுடனும், வெப்ஸ்டர் 1 ரன்னுடனும் ஆடி வருகின்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |