4 விக்கெட்டுகளுடன் மிரட்டலான ரன்அவுட்! தெறிக்கவிட்ட டிராவிஸ் ஹெட் (வீடியோ)
அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில், தென் ஆப்பிரிக்கா 297 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.
டெம்பா பவுமா 65 ஓட்டங்கள்
கெய்ர்ன்ஸில் நடந்து வரும் முதல் ஒருநாள் போட்டியிகள் தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.
And that's the 50 up for Matthew Breetzke 👏#AUSvSA live blog: https://t.co/GiDgrsKea5 pic.twitter.com/ULoyl5iBVz
— cricket.com.au (@cricketcomau) August 19, 2025
எய்டன் மார்க்ரம் 82 ஓட்டங்களும், பிரீட்ஸ்கி 57 ஓட்டங்களும் விளாசி வெளியேற, அணித்தலைவர் டெம்பா பவுமாவும் அரைசதம் அடித்தார். அவர் 74 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 65 ஓட்டங்கள் குவித்தார்.
ஆனால் டிராவிஸ் ஹெட்டின் (Travis Head) மிரட்டலான பந்துவீச்சில் ஸ்டப்ஸ் (0), பிரேவிஸ் (6) ஆகியோர் சொற்ப ரன்னில் அவுட் ஆகினர்.
ஹெட் 4 விக்கெட்டுகள்
எனினும் வியான் முல்டர் (Wiaan Mulder) ஆட்டமிழக்காமல் 26 பந்துகளில் 1 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 31 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட்டுகளுக்கு 296 ஓட்டங்கள் குவித்தது. ஹெட் 4 விக்கெட்டுகளும், ட்வர்ஷுய்ஸ் 2 விக்கெட்டுகளும், ஜம்பா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
OH MY GOODNESS HOW HAS TRAVIS HEAD DONE THAT! @BKTtires | #PlayoftheDay | #AUSvSA pic.twitter.com/gEMxOp3dYd
— cricket.com.au (@cricketcomau) August 19, 2025
இதற்கிடையில், ஹெட் 49வது ஓவரில் ப்ரென்லன் சுப்ராயெனை அபாரமாக ரன்அவுட் செய்து மிரட்டினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |