59 பந்தில் சதம்! களமிறங்கிய முதல் போட்டியிலேயே மரண பயத்தை காட்டிய வீரர்..அதிர்ந்த மைதானம்
அவுஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் 59 பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார்.
டிராவிஸ் ஹெட்
நியூசிலாந்துக்கு எதிராக அவுஸ்திரேலிய அணியில் முதல் முறையாக இந்த உலகக்கோப்பை தொடரில் டிராவிஸ் ஹெட் களமிறங்கினார்.
AP
தொடக்கம் முதலே அதிரடியில் இறங்கிய ஹெட் சிக்ஸர், பவுண்டரிகள் என பறக்கவிட்டு அதகளம் செய்தார். 25 பந்துகளில் அரைசதம் விளாசிய அவர், தொடர்ந்து வாணவேடிக்கை காட்டினார்.
அவரது வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் தடுமாறினார். இதற்கிடையில் டேவிட் வார்னர் 81 (65) ஓட்டங்களில் அவுட் ஆனார்.
அதிரடி சதம்
எனினும் ஹெட் ருத்ர தாண்டவமாடி 59 பந்துகளில் சதம் விளாசினார். இது ஒருநாள் போட்டிகளில் அவரது 4வது சதம் ஆகும்.
Travis Head marks his World Cup debut with a 59-ball century! #CWC23
— cricket.com.au (@cricketcomau) October 28, 2023
அத்துடன் அதிவேகமாக உலகக்கோப்பையில் சதம் விளாசிய 3வது அவுஸ்திரேலிய வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |