ஜாம்பவானுக்கு பின் சாதனை படைத்த டிராவிஸ் ஹெட்!
அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்ட்டில் 7வது சதம் விளாசினார்.
அடிலெய்டில் வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் அவுஸ்திரேலிய அணி விளையாடி வருகிறது.
வெஸ்ட் இண்டீஸ் தனது முதல் இன்னிங்சில் 188 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனதைத் தொடர்ந்து, அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சை தொடங்கியது.
கவாஜாவை (45) தவிர ஏனைய தொடக்க வீரர்கள் சொதப்பினர். பின்னர் வந்த மிட்செல் மார்ஷ் (5), அலெக்ஸ் கேரி (15) ஆகியோரும் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர்.
Izhar KHAN/AFP
அப்போது அதிரடியில் மிரட்ட தொடங்கிய டிராவிஸ் ஹெட் (Travis Head) சதம் விளாசினார். 134 பந்துகளை எதிர்கொண்ட அவர், 3 சிக்ஸர் மற்றும் 12 பவுண்டரிகளுடன் 119 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். ஹெட்டுக்கு இது 7வது டெஸ்ட் சதம் ஆகும்.
அத்துடன் அடிலெய்டு மைதானத்தில் இரண்டாவது சதமாக இது பதிவாகி இருப்பதால், அவுஸ்திரேலிய ஜாம்பவான் இயான் சேப்பலுக்கு பிறகு இம்மைதானத்தில் அதிக சதங்கள் அடித்த தெற்கு அவுஸ்திரேலியர் என்ற சாதனையை படைத்துள்ளார்.
Paul Kane/Getty Images
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |