ஜிம்பாப்வேவிற்கு எதிராக அதிவேக சதம்: சாதனை படைத்த அவுஸ்திரேலிய வீரர்
Travis head 112 runs in 84 balls vs zimbabwe: அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக சதம் விளாசினார்.
ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில், அவுஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் அதிவேக சதம் விளாசி சாதனை படைத்தார்.
அதிவேக சதம்
ஹராரேயில் அவுஸ்திரேலியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி நடந்து வருகிறது.
A magnificent knock by Travis Head! 🔥 He scored a brilliant 112 runs. 💯#TravisHead #AUSvsZIM
— CREX (@Crex_live) September 18, 2026
pic.twitter.com/aHlk5KYIb6
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலிய அணியில் மிட்செல் மார்ஷ் (Mitchell Marsh) 53 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
டிராவிஸ் ஹெட், கூப்பர் கோனொலி கூட்டணி நிதானமாக ஓட்டங்களை சேர்த்தது. அதிரடி ஆட்டத்தில் மிரட்டிய டிராவிஸ் ஹெட் (Travis Head) 75 பந்துகளில் சதம் விளாசினார்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் அதிவேகமாக சதம் விளாசிய வீரர் என்ற சாதனையை ஹெட் படைத்தார்.
86 பந்துகளில்
இதற்கு முன் சக அணி வீரர் மேட் ரென்ஷா 86 பந்துகளில் சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. டிராவிஸ் ஹெட் 84 பந்துகளில் 3 சிக்ஸர், 15 பவுண்டரிகளுடன் 112 ஓட்டங்கள் குவித்து ஆட்டமிழந்தார்.

பின்னர் இங்கிலிஸ் 21 ஓட்டங்களிலும், கேரி 20 ஓட்டங்களிலும் வெளியேறினர். அரைசதம் அடித்த கூப்பர் கோனொலி 69 பந்துகளில் 78 ஓட்டங்கள் விளாசினார்.
ஆலிவர் பீக் 18 பந்துகளில் 41 ஓட்டங்கள் (3 சிக்ஸர், 2 பவுண்டரிகள்) விளாச, அவுஸ்திரேலியா 356 ஓட்டங்கள் குவித்தது. பிராட் எவன்ஸ் 3 விக்கெட்டுகளும், மஸகட்சா 2 விக்கெட்டுகளும், மாத்வேரே ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.
