தாலி கட்டாமல் நடைபெற்ற அனிருத் - காவ்யா மாறன் திருமணம்; உறுதிப்படுத்திய முன்னாள் அமைச்சர்
trb rajaa confirms anirudh kavya maran did self respect marriage: அனிருத் - காவ்யா மாறன் திருமணம் தாலி கட்டாமல் நடைபெற்றதாக முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தெரிவித்துள்ளார்.
அனிருத் - காவ்யா மாறன் திருமணம்
பிரபல இசையமைப்பாளர் அனிருத் ரவிச்சந்திரன் மற்றும் SRH அணி உரிமையாளர் காவ்யா மாறனுக்கு நேற்று கிரீஸ் நாட்டில் திருமணம் நடைபெற்றது.

இந்த திருமணத்தில், முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், நடிகர் ரஜினிகாந்த் உள்ளிட்ட நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
நவம்பர் 21 ஆம் திகதி முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கு வகையில், திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னை நட்சத்திர ஓட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உறுதிப்படுத்திய டி.ஆர்.பி.ராஜா
மணப்பெண் காவ்யா மாறன், சுயமரியாதை திருமணத்தை வலியுறுத்தும் திராவிட அரசியல் குடும்பத்தை சேர்ந்தவர் என்பதால், இந்த திருமணம் வேதமுறைப்படி நடைபெற்றதா அல்லது சுயமரியாதை முறையில் என சமூகவலைதளங்களில் விவாதம் எழுந்துள்ளது.

இது வேத முறைப்படி நடக்காத, சுயமரியாதை சார்ந்த திருமணம் போலத் தெரிகிறது. நான் சொல்வது சரிதானே? என்று X பயனர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்துள்ள முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, "ஆம். காவ்யாவும் அனிருத்தும் ஒருவருக்கொருவர் மாலை அணிவித்துக் கொண்டனர்.
@DrGanesh_Japan YES ... Kavya and Anirudh garlanded each other... #Thalaivar handed over a chain to Kavya and #Superstar handed over a chain to Anirudh... the bride and groom exchanged chains and an union of hearts was blessed by their friends and family♥️🎊
— Dr. T R B Rajaa (@TRBRajaa) November 12, 2026
தலைவர் (மு.க.ஸ்டாலின்) காவ்யாவுக்கு ஒரு சங்கிலியையும், சூப்பர்ஸ்டார் (ரஜினிகாந்த்) அனிருத்துக்கு ஒரு சங்கிலியையும் வழங்கினர். மணமக்கள் சங்கிலிகளை மாற்றிக்கொண்டனர், மேலும் இந்த இதயங்களின் சங்கமம் அவர்களது நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரால் ஆசீர்வதிக்கப்பட்டது" என தெரிவித்துள்ளார்.