கணவன்-மனைவி ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் தற்கொலை: புதுமண தம்பதியின் முடிவில் விலகாத மர்மம்
தமிழகத்தில் ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் கணவன் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருமணத்திற்கு சொந்த ஊர் சென்ற தம்பதி
தமிழகத்தின் வாணியம்பாடியைச் சேர்ந்த அருண்குமார்(37) சென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை செய்து வருகிறார். இவருக்கு 6 மாதங்களுக்கு முன்பு தான், வாணியம்பாடியைச் சேர்ந்த தேன்மொழி(30) என்ற பெண்ணுடன் திருமணம் முடிந்துள்ளது.
இருவரும் கடந்த ஆறு மாதங்களாக சென்னையில் உள்ள அசோக் நகரில் ஒன்றாக வசித்து வந்துள்ளனர். இந்நிலையில் அருண்குமாரின் தம்பி ராஜாவின் திருமண நிகழ்ச்சிக்காக இருவரும் சொந்த ஊரான வாணியம்பாடிக்கு சென்றுள்ளனர்.
Google map உதவியுடன் திருடனை துரத்தி பிடித்த தமிழக வாலிபர்: Technology-யை சரியாக பயன்படுத்தியது எப்படி?
திருமணம் முடிந்து அருண்குமார் சென்னை திரும்பியுள்ளார், தேன்மொழி சில நாட்கள் தாய் வீட்டில் இருந்து வருவதாக கூறி வாணியம்பாடியிலேயே தங்கியுள்ளார்.
தற்கொலை செய்து கொண்ட தம்பதி
சென்னை திரும்பிய அருண்குமார் வேலைக்கு செல்லவில்லை என சொல்லப்படுகிறது, இதையடுத்து அவரது நண்பர் அருண்குமாருக்கு 2 நாட்களாக தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார்.
ஆனால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லை என்றதும், அருண்குமார் தாயாரை தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர் வேலைக்காக சென்னை திரும்பி விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த நண்பர், உடனடியாக பொலிஸாரிடம் புகார் அளித்துள்ளார், புகாரின் பெயரில் அருண்குமாரின் அசோக் நகர் வீட்டிற்கு விசாரணைக்காக சென்ற பொலிஸார், அங்கு அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு இருப்பதை கண்டுபிடித்தனர்.
மனைவியும் தற்கொலை இந்த தகவலை அவரது மனைவி மற்றும் பெற்றொருக்கு தெரிவிக்க பொலிஸார் தொடர்பு கொண்ட போது, மனைவி தேன்மொழி வாணியம்பாடியில் உள்ள பெற்றோர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டு தெரியவந்துள்ளது.
இதையடுத்து வாணியம்பாடி பொலிஸார் தேன்மொழி தற்கொலை குறித்து வழக்குபதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
திருமணமான ஆறே மாதத்தில் கணவன்-மனைவி இருவரும் ஒரே நாளில் வெவ்வேறு ஊர்களில் தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |