தலைவலி என சிகிச்சைக்கு சென்ற பெண்: எலுமிச்சை கொடுத்து ரூ.50 ஆயிரம் பறித்த டாக்டர்
இந்திய மாநிலம், ஆந்திராவில் சிகிச்சைக்கு சென்ற பெண்ணிடம் எலுமிச்சை மற்றும் சாம்பலை கொடுத்து 50 ஆயிரம் ரூபாயை டாக்டர் ஒருவர் பறித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தலைவலி வந்த பெண்ணுக்கு எலுமிச்சை
ஆந்திர மாநிலம் ஐதராபாத் எல்.பி.நகரில் ஆயுர்வேத கிளினிக் ஒன்று இயங்கி வருகிறது. இந்த கிளினிக்கை டாக்டர் ஒருவர் தனியாக நடத்தி வருகிறார்.
இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தலைவலி மற்றும் நரம்பு பகுதியில் வலி இருப்பதாக கூறி சிகிச்சைக்காக கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அவர், ஆயுர்வேத சிகிச்சையை பெற அங்கு சென்றுள்ளார்.
ஆனால், அங்கிருந்த டாக்டர் மருந்துகளை கொடுப்பதற்கு பதிலாக எலுமிச்சை மற்றும் சாம்பலை ஒரு சிறிய பையில் கொடுத்துள்ளார்.
ரூ.50 ஆயிரம் பறிப்பு
பின்பு, அமாவாசை தினத்தன்று பூஜைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார். பூஜை அறையில் அந்த பெண்ணை அமரவைத்து மந்திரங்களை உச்சரித்துள்ளார்.
மேலும், பூஜை பொருள்கள் எனக்கூறி மளிகை பொருளையும் வாங்கி வரக் கூறியுள்ளார். அதுமட்டுமல்லாமல், ரூ. 50 ஆயிரம் பணத்தையும் வாங்கியுள்ளார்.
இதனால், அதிர்ச்சியடைந்த அந்த பெண் உறவினர்களிடம் கூறியுள்ளார். இதையடுத்து, உறவினர்கள் பொலிசாரிடம் புகார் அளித்ததை தொடர்ந்து, பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |