பெண்களே உஷார்...வெள்ளைப்படுதல் இருந்தால் சாதாரணமாக இருக்க வேண்டாம்!
பொதுவாகவே பெண்களுக்கு எற்படக்கூடிய பிரச்சினைகளில் ஒன்றாக இருப்பது வெள்ளைபடுதல். இது எதனால் ஏற்படுகின்றது மற்றும் இது ஏற்படுவதால் பெண்களுக்கு உடல் ரீதியாக என்ன நடைபெறும் என தெரிந்திருக்க முடியாது.
ஆகவே இது எதனால் ஏற்படுகின்றது மற்றும் இது வருவதால் என்ன நடக்கும் என் இந்த பதிவின் மூலம் தெரிந்துக்கொள்வோம்.
வெள்ளைப்படுதல் என்றால் என்ன?
பெண்களின் பிறப்புறுப்பு வழியே மஞ்சள் கலந்து வெண்ணிறமான நீர்மம் வெளிப்படுதலாகும். இதனை வெள்ளைப்படுதல் என்று குறிப்பிடுகின்றார்கள்.
தொற்று பாதிப்பு எதுவும் இல்லாமலும்கூட பெண்களுக்கு வெள்ளைப்படுதல் ஏற்படலாம்.
பாதிப்பில்லாத இந்த வெள்ளைப்படுதல், பெரும்பாலும் பருவமடையும் காலத்துக்கு சில நாள்களுக்கு முன், மாதவிடாய்க்கு முந்தைய நாட்களிலும் கர்ப்பமான காலங்களிலும் ஏற்படும்.
தொற்றினால் ஏற்படுவதற்கு காரணம்?
பாதுகாப்பற்ற உறவு மற்றும் பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பின்பற்றாமல் உறவு கொள்வதால் இத்தகைய தொற்று பாதிப்புகள் ஏற்படும். இதனால் பிறப்புறுப்பில் வீக்கம் அல்லது புண், கொப்புளங்கள் வரும். இதை சரிசெய்யா விட்டால் கர்ப்பப்பைக்குத் தொற்று பரவும்.
பரிசோதனைகள்
வெள்ளைப்படுதலின்போது வெளிப்படும் திரவத்தை பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும். தொடர்ச்சியாக வெள்ளைப்படுதல் இருந்தாலோ, துர்நாற்றம் வீசினாலோ உடனடியாக பரிசோதனையை செய்ய வேண்டும்.
அறிகுறிகள்
-
சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல்
- பிறப்புறுப்பில் ஒவ்வாமை
- பிறப்புறுப்பில் புண் அல்லது கொப்புளங்கள்
- உடலுறவின்போது பிறப்புறுப்பில் தீவிர வலி
பிறப்புறுப்பைச் சுத்தமாக வைத்துக் கொள்வதன்மூலம், வெள்ளைப்படுதலைத் தடுக்கலாம்.
பருத்தித் துணிகளால் ஆன உள்ளாடைகளை அணிவது நல்லது.
கீழாநெல்லியை அரைத்து பசும்பாலில் கலந்து தொடர்ந்து 7 நாட்கள் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் நல்லது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |