ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த வீரர்! கிரிக்கெட் உலகை அதிர்ச்சியாக்கிய முடிவு
நியூசிலாந்து கிரிக்கெட் வீரர் ட்ரெண்ட் போல்ட் புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட மறுத்த விடயம் கிரிக்கெட் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் டிரெண்ட் போல்ட், தேசிய அணி நிர்வாகத்தின் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை.
இதனால் அவர் ஐபிஎல் போன்ற தொடர்களில் விளையாட முடிவு செய்து விட்டதாக செய்திகள் வெளியாகின. ஆனால் அவர் இதனை மறுத்துள்ளார்.
தனது மனைவி, குழந்தைகளுடன் நேரத்தை செலவழிக்கவே அவர் இந்த முடிவை எடுத்ததாக தெரிவித்துள்ளார். போல்ட் ஊதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், அணி நிர்வாகத்தின் அனுமதி இல்லாமல் அவரால் மற்ற நாடுகளில் நடக்கும் டி20 போட்டிகளில் விளையாட முடியாது.
அவர் ஊதிய ஒப்பந்தத்தை மறுத்ததால் இனி நியூசிலாந்து அணியில் இடம் பெறுவது சந்தேகம் தான் என்று கிரிக்கெட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.
PC: Tom Jenkins/The Guardian
முன்னதாக, பல வீரர்கள் ஐபிஎல், பிக் பேஷ் லீக், சிபிஎல் போன்ற தொடர்களில் விளையாட ஆர்வம் காட்டி வருகின்றன. இதற்கு காரணம் தேசிய அணிக்காக விளையாடுவதை விட இதுபோன்ற தொடர்களில் அதிக பணம் கிடைக்கும் என்பதால் தான் என்று கூறப்படுகிறது.
தற்போது மிகச் சிறந்த வேகப்பந்து வீச்சாளரான போல்ட், ஊதிய ஒப்பந்தத்தை மறுத்தது கிரிக்கெட் உலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இங்கிலாந்து வீரர் பென் ஸ்டோக்ஸ் ஒருநாள் கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றது, அந்த வகை கிரிக்கெட்டின் எதிர்காலம் குறித்து கேள்வியை எழுப்பியது குறிப்பிடத்தக்கது.
PC: Getty Images