கில்லர் மில்லரின் ருத்ர தாண்டவம் வீண்! வெற்றி பெறாமலேயே இறுதிப்போட்டிக்குள் நுழைந்த அணி
The Hundred தொடரின் இறுதிப் போட்டிக்கு ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி முன்னேறியது.
டேவிட் மில்லர் ருத்ர தாண்டவம்
லண்டன் ஓவல் மைதானத்தில் நடந்த போட்டியில் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் மற்றும் ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணிகள் மோதின.
98 metres.
— The Hundred (@thehundred) August 30, 2025
Oh, and it's gone out of the ground. #TheHundredEliminator pic.twitter.com/L538Hrh9iE
மழை காரணமாக நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி முதல் இன்னிங்ஸில் 75 பந்துகள் மட்டுமே விளையாடியது.
ஜக் கிராவ்லே டக்அவுட் ஆக, தாவித் மலான் 19 பந்துகளில் 29 ஓட்டங்கள் விளாசி ஆட்டமிழந்தார். அணித்தலைவர் ஹாரி புரூக் (6), கிளார்க் (1) சொதப்ப டேன் லாரன்ஸ் அதிரடி காட்டினார்.
மறுமுனையில் ருத்ர தாண்டவமாடிய டேவிட் மில்லர் (David Miller) 10 பந்துகளில் 4 சிக்ஸர்களுடன் 28 ஓட்டங்கள் விளாசினார்.
இதன்மூலம் நார்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணி 119 ஓட்டங்கள் எடுத்தது. டேன் லாரன்ஸ் (Dan Lawrence) 31 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 44 ஓட்டங்கள் எடுத்தார்.
டேவிட் வில்லி, மார்க்ஸ் ஸ்டோய்னிஸ் தலா 2 விக்கெட்டுகளும், ரெஹான் அகமது ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
Harry Brook is doing it again ‼️#TheHundredEliminator pic.twitter.com/O4BaYaKZ0C
— The Hundred (@thehundred) August 30, 2025
இறுதிப்போட்டிக்கு முன்னேறிய ட்ரென்ட் ராக்கெட்ஸ்
பின்னர் ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி 5 பந்துகளில் 12 ஓட்டங்கள் மழை குறுக்கிட்டு தடைப்பட்டது.
இதனால் புள்ளிகள் அடிப்படையில் ட்ரென்ட் ராக்கெட்ஸ் அணி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இன்று லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள போட்டியில் ஓவல் இன்வின்சிபிள் அணியை ட்ரென்ட் ராக்கெட்ஸ் எதிர்கொள்கிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |