91 ஓட்டங்களுக்கு சுருண்ட சன்ரைசர்ஸ்: முதல் கிண்ணத்தை வென்ற ட்ரெண்ட் ராக்கெட்ஸ்
2026 The Hundred மகளிர் கிண்ணத்தை முதல் முறையாக ட்ரெண்ட் ராக்கெட்ஸ் வென்றது.
லார்ட்'ஸில் நடந்த The Hundred மகளிர் தொடர் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றது ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மகுடம் சூடியது.
சுருண்ட சன்ரைசர்ஸ் லீட்ஸ்
2026 The Hundred மகளிர் தொடரின் இறுதிப்போட்டியில் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணிகள் மோதின.
முதலில் ஆடிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி 91 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக அன்னபெல் சதர்லேண்ட் 25 ஓட்டங்கள் எடுத்தார்.
கிம் கார்த், சமந்தா பேட்ஸ், சார்லே பிலிப்ஸ் மற்றும் ஜார்ஜியா ஆடம்ஸ் தலா 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
ட்ரெண்ட் ராக்கெட்ஸ் சாம்பியன்
பின்னர் ஆடிய ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி 54 பந்துகளில் 92 ஓட்டங்கள் எடுத்து வெற்றி பெற்றது. சோபியா டங்கலே 41 (23) ஓட்டங்களும், பெத் மூனி 31 (21) ஓட்டங்களும் விளாசினர்.

இந்த வெற்றியின் மூலம் ட்ரெண்ட் ராக்கெட்ஸ் அணி முதல் முறையாக கிண்ணத்தை வென்று மகுடம் சூடியது.
ஆட்டநாயகி விருதினை ஜார்ஜியா ஆடம்ஸும், தொடர் நாயகி விருதை அன்னபெல் சதர்லேண்டும் பெற்றனர்.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |