ட்ரம்புடன் பிரதமர் ஸ்டார்மர் இந்த முடிவை எடுத்தால்..லாபகரமான வர்த்தக ஒப்பந்தத்தை எட்டலாம்: கன்சர்வேடிவ் செயலாளர்
முன்னாள் கன்சர்வேடிவ் செயலாளரான டிரெவெல்யன், பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உடனான சில மாதங்களுக்குள் லாபகரமான ஒப்பந்தத்தை எட்ட முடியும் என்று தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம்
கடந்த 2021ஆம் ஆண்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியில் இருந்து விலகும்போது, அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் குறித்து பிரித்தானியா தரப்பில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது கன்சர்வேடிவ் கட்சியின் அன்னே-மேரி டிரெவெல்யன், ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வந்தபோது இருதரப்பும் பாதியிலேயே இருந்ததாக கூறினார்.
அத்துடன் புதிய வர்த்தக ஒப்பந்தங்களை ஏற்படுத்துவதில் தனக்கு எந்த ஆர்வமும் இல்லை என்று ஜோ பைடன் தெளிவுபடுத்தியதைத் தொடர்ந்து, பேச்சுவார்த்தைகள் ஆழ்ந்த முடக்கத்தில் சென்றன.
இந்த நிலையில்தான் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வர்த்தக ஒப்பந்தம் என்ற யோசனையை மீண்டும் உயிர்ப்பிப்பதில் தான் ஆர்வமாக இருப்பதாக சமிக்ஞை செய்துள்ளார்.
பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஐரோப்பிய ஒன்றியத்துடனான ஒரு புதிய ஒப்பந்தத்திற்கு முன்னுரிமை அளிக்க தேர்ந்தெடுத்துள்ள போதிலும், லேபர் கட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
டிரெவெல்யன்
இதுகுறித்து டிரெவெல்யன் ஊடகத்திடம் கூறுகையில், "ப்ரஸ்ஸல்ஸை விட அமெரிக்காவுடன் ஒரு ஒப்பந்தத்தை விரைவாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளன. அமைச்சர்கள் கடந்த அரசாங்கத்தின் பணிகளைக் கட்டியெழுப்பினால், மாதங்களில் ஒரு உடன்பாட்டை எட்ட முடியும்.
அது முற்றிலும் சாத்தியம் என்று நான் நினைக்கிறேன். ஐரோப்பிய ஒன்றியத்துடனான எந்தவொரு சவாலும், நீங்கள் அனைவரும் ஒப்புக்கொள்ள வேண்டிய பல நாடுகளுடன் கையாள்வதுதான் என்று நான் நினைக்கிறேன்.
மேலும், சவாலாக இருப்பது என்னவென்றால் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமாக (பிரெக்சிட் ஒப்பந்தம்) இருந்தாலும், நாம் பெற்ற நிலைக்கு பேச்சுவார்த்தை நடத்த நீண்ட நேரம் எடுத்தது. எல்லோரும் கொஞ்சம் வித்தியாசமாக இழுக்கிறார்கள்" என தெரிவித்தார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |