மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர்: வழக்கு விசாரணை இன்று துவக்கம்
ஜேர்மனியில் மக்கள் கூட்டத்தின் மீது வேண்டுமென்றே காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர் தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று துவங்க உள்ளது.
மக்கள் கூட்டத்தின் மீது காரைக்கொண்டு மோதிய புலம்பெயர்ந்தோர்
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 13ஆம் திகதி, ஜேர்மனியின் பவேரியா மாகாண தலைநகரான மியூனிக் நகரில், தொழிற்சங்க பேரணி ஒன்று நடந்துகொண்டிருந்த நிலையில், ஒருவர் வேண்டுமென்றே அந்தக் கூட்டத்தின் மீது வேகமாகக் காரைக் கொண்டு மோதினார்.

அந்த பயங்கர சம்பவத்தில் இரண்டு வயதுக் குழந்தை ஒன்றும், அதன் தாயாகிய 37 வயதுப் பெண்ணும் பலியானார்கள், குழந்தைகள் உட்பட 44 பேர் காயமடைந்தார்கள்.
அவர் மீது இரண்டு கொலைக்குற்றச்சாட்டுகளும், 44 கொலை முயற்சிக் குற்றச்சாட்டுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.
ஆப்கன் நாட்டவரான அந்த நபருடைய பெயர் Farhad N (25). புகலிடம் கோரி ஜேர்மனி வந்திருந்தார் அவர்.

அவர் கைது செய்யப்பட்டபோது, உலகம் முழுவதிலும் இஸ்லாமியர்கள் அனுபவிக்கும் கஷ்டங்களுக்காக, தான் ஜேர்மனியில் யாரையாவது கொல்ல கடமைப்பட்டுள்ளதாக தான் நம்புவதாகத் தெரிவித்திருந்தார் அவர்.
இந்நிலையில், Farhad மீதான வழக்கு விசாரணை இன்று மியூனிக் நீதிமன்றம் ஒன்றில் துவங்க உள்ளது.
இந்த மோதலின்போது நடந்த ஒரு பயங்கர விடயம் என்னவென்றால், மக்கள் மீது மோதிய அந்தக் கார், 23 மீற்றர் தூரம் சென்று தானாக நின்றுவிட்டது.
அதாவது, காருக்கு அடியில் முழுவதும் மனிதர்களே இருந்ததால், அதாவது, கார் முழுவதும் மனிதர்கள் மீது மட்டுமே ஏறிச் சென்றதால், காரின் முன் சக்கரங்கள் தரையைத் தொடாததால் கார் நின்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |