திருநங்கையுடன் உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளும் நிலை: நீதிமன்றம் சென்ற பெண்கள்
பிரித்தானிய மருத்துவமனை ஒன்றில், திருநங்கை ஒருவருடன் ஒரே உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதைத் தொடர்ந்து நீதிமன்றம் சென்றார்கள் பெண் செவிலியர்கள் சிலர்.
அந்த வழக்கில், செவிலியர்களுக்கு ஆதரவாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
திருநங்கையுடன் ஒரே அறையில்...
டார்லிங்டன் நினைவு மருத்துவமனையில் தாங்கள் ரோஸ் (Rose Henderson) என்னும் திருநங்கை ஒருவருடன் தங்கள் உடைமாற்றும் அறையை பகிர்ந்துகொள்ளவேண்டிய நிலை குறித்து தங்கள் மேலாளரிடம் புகார் தெரிவித்துள்ளார்கள் எட்டு செவிலியர்கள்.

அதற்கு அந்த மேலாளர், ‘கொஞ்சம் பெரிய மனதுடன் நடந்துகொள்ளுங்கள்’ என கூறினாராம்.
மருத்துவமனையோ, மேலாளரோ தங்கள் புகாருக்கு செவி சாய்க்காததால் துறை சார் நீதிமன்றத்தை அணுகியுள்ளார்கள் அந்த செவிலியர்கள்.
தாங்கள் திருநங்கைகளுக்கு எதிரானவர்கள் அல்ல என்று கூறியுள்ள அந்த செவிலியர்கள், அதே நேரத்தில் ஒரு கட்டத்தில் ரோஸ் தாங்கள் உடை மாற்றும்போது தங்களையே பார்த்துக்கொண்டிருந்ததாகவும், அது தங்களை அசௌகரியமாக உணரச் செய்ததாகவும் அதைத் தொடர்ந்தே தாங்கள் மருத்துவமனை நிர்வாகத்திடம் புகார் செய்ததாகவும் தெரிவித்துள்ளார்கள்.
வழக்கு நீதிமன்றம் சென்ற நிலையில், செவிலியர்களுக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நீதிமன்றம், மருத்துவமனை நிர்வாகத்தின் செயல் அந்த செவிலியர்களின் தன்மானத்தை மீறும் செயல் என்றும் கூறியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |