லண்டனில் சீக்கியர் ஒருவர் கொலை: மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது
லண்டனில் சீக்கியர் ஒருவர் குத்திக் கொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக மூன்று பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டார்கள்.
லண்டனில் கொலை செய்யப்பட்ட சீக்கியர்
கடந்த புதன்கிழமை, அதாவது, ஜூலை மாதம் 23ஆம் திகதி, இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக பொலிசாருக்கு அழைப்பு வந்தது.
மருத்துவ உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற எடுத்த முயற்சிகள் பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துவிட்டார்.
உயிரிழந்த நபரின் பெயர் கேரி என்னும் குர்முக் சிங் (30).
குர்முக் சிங்கை கொலை செய்ததாக அமர்தீப் சிங் (27) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவருடன், 29 வயதுடைய மற்றொரு ஆணும், முறையே 29, 30, 54 வயதுடைய மூன்று பெண்களும் கைது செய்யப்பட்டார்கள்.
என்றாலும், அமர்தீப் தவிர மற்ற அனைவரும் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். அமர்தீப் மீதான வழக்கு விசாரணை, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 5ஆம் திகதி துவங்க உள்ளது.
கேரி எதற்காக தாக்கப்பட்டார் என்பது தெரியவில்லை. மேலும், கேரியின் தொடையில் விழுந்த ஒரு குத்து அவரது உயிரைப் பறித்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |