திருச்சியில் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் - அமெரிக்காவில் ரூ.2114 கோடி வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியது எப்படி?
திருச்சியில் ஒரு ஓலைக் குடிசையில் வாழ்ந்த எளிய குடும்பத்தில் ஆறு பேர்களுடன் பிறந்த சித் அகமது என்பவர் அமெரிக்காவில் ரூ.2114 கோடி வணிக சாம்ராஜ்யத்தை உருவாக்கியுள்ளார்.
யார் இந்த சித் அகமது?
தமிழ்நாட்டில் காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள திருச்சியில் 6 உடன்பிறப்புகளுடன் பிறந்து, எளிய வாழ்க்கையை வாழ்ந்து வந்துள்ளார்.
எட்டு பேர் கொண்ட பெரிய குடும்பத்தை கவனித்துக் கொள்வதற்காக சித்தின் தந்தை சிறிய வேலைகளைச் செய்து வந்தார்.
ஓட்டுநர், விவசாயி மற்றும் கால்நடைகளுக்கு மருந்து தயாரித்தல் போன்ற வேலைகளை செய்து வந்துள்ளார்.
Photos: Special Arrangement
திருச்சியில் வளர்ந்து 1989 ஆம் ஆண்டு திருச்சியில் உள்ள செயின்ட் ஜான்ஸ் வெஸ்ட்ரி ஆங்கிலோ மேல்நிலைப் பள்ளியில் 12 ஆம் வகுப்பை முடித்தார்.
தொடர்ந்து Ghousia College of Engineering ல் B.Tech பொறியியல் பட்டம் பெற்றார்.
வணிக சாம்ராஜ்யம்
கல்லூரியை முடித்ததும், திருச்சியில் ரூ. 1,200 சம்பளத்தில் விற்பனை நிர்வாகியாக வேலை கிடைத்தது, அங்கு பணியாற்றிக்கொண்டே தன்னுடைய திறமைகளையும் வளர்த்துக் கொண்டார்.
தொடர்ந்து மேலாளராக சென்னையில் வேலை கிடைக்க, படிப்படியாக முன்னேறி Zero Wait என்ற அமெரிக்க நிறுவனத்தில் சேர்ந்துள்ளார்.
1997ம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்றவர், இந்தியா, சீனா உட்பட நாடுகளில் இருந்து மென்பொருள் வல்லுநர்களை பணியமர்த்துவதற்கான வேலையை செய்து வந்துள்ளார்.
அடுத்ததாக 2001ம் ஆண்டு Systel நிறுவனத்தில் பணிக்கு சேர்ந்தார்.
அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த போது தான், முன்னணி நிறுவனங்கள் சென்னை, ஹைதராபாத் போன்ற நகரங்களில் கவனம் செலுத்துவதையும், தனது சொந்த ஊரான திருச்சியில் வேலைவாய்ப்பு இல்லாமல் இருப்பதையும் உணர்ந்துள்ளார்.
அப்போதே தன்னுடைய வேலையை உதறிவிட்டு, 500 டொலர் மதிப்பீட்டில் Alpharetta இல் VDart ஐ தொடங்கினார்.
வெறும் 5 நபர்களுடன் தொடங்கிய நிறுவனம் இன்று 2000க்கும் மேற்பட்ட பணியாளர்களுடன் இயங்கிக் கொண்டிருக்கிறது.
VDartன் வாடிக்கையாளர்கள் Accenture, Cap Gemini, Infosys, Tech Mahindra, Delta Airlines, Coca-Cola, Toyota, மற்றும் General Electric ஆகும்.
மேலும் இவர் அமெரிக்காவில் நடத்தி வரும் நிறுவனத்தின் மூலம் மாத்திரம் ரூ. 2114 கோடி கிடைப்பதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |