காவல்துறை குறித்து தரக்குறைவாக பேசிய சீமான்.., திருச்சி எஸ்பி எடுத்த உடனடி முடிவு
காவல்துறை பதவிகள் குறித்து சீமான் சர்ச்சையாக பேசிய நிலையில் திருச்சி மாவட்ட எஸ்பி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சர்ச்சை பேச்சு
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழகத்தில் நிலவி வரும் படுகொலைகள், சட்டம் ஒழுங்கு சீர்கேடு, மின்கட்டண உயர்வு உள்ளிட்டவற்றை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி சீமான் காவல்துறை பொறுப்பு வகிக்கும் பதவிகளை இழிவுபடுத்தி பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது சம்மந்தமான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவியது.
வழக்கு தொடர முடிவு
இந்நிலையில், இவரின் பேச்சுக்கு திருச்சி மாவட்ட எஸ்.பி வருண்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இதுகுறித்து எஸ்.பி வருண்குமார் தனது ட்விட்டர் எக்ஸ் தளத்தில், "நான் ஏற்கனவே எனது வழக்கறிஞர் மூலம் சீமானுக்கு கிரிமினல் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளேன்.
Sir post @VarunKumarIPSTN pic.twitter.com/VkqRaIQtYm
— ?.?????????? (@Selvantk2305) August 4, 2024
சீமானின் பொய்யான அபிப்பிராயங்களுக்கு நீதிமன்றங்கள் மூலம் வழக்கு தொடர்வேன். ஜனநாயகம் மற்றும் நீதிமன்றங்கள் மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.
பொது மேடையில் பேசினாலும், பொய்களை தமிழக மக்கள் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள்" என்று கூறியுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |