சுவிஸில் தீவிபத்தில் சிக்கிய குடியிருப்பு... படுகாயங்களுடன் தப்பிய கணவர்: அம்பலமான மனைவியின் சுய ரூபம்
சுவிட்சர்லாந்தில் தீக்கிரையான குடியிருப்பில் கணவன் படுகாயத்துடன் தப்பிய நிலையில், அவரது மனைவியின் சுய ரூபம் விசாரணையில் அம்பலமாகியுள்ளது.
ஆர்காவ் மண்டலத்தின் Zofingen பகுதியில் கணவனைக் கொல்ல சொந்த குடியிருப்பை கொளுத்திய சம்பவத்தில் அவரது மனைவி சிக்கியுள்ளார்.
கடந்த 2017 ஆகஸ்டு 30ம் திகதி சுவிஸ் பெண்மணி ஒருவர் தமது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினருடன் வசித்துவந்த குடியிருப்பானது தீக்கிரையானது.
இந்த சம்பவத்தில் இரண்டு பிள்ளைகளுடன் அவர் சிறு காயமின்றி தப்பினாலும் அவரது கணவர் படுகாயத்துடன் மீட்கப்பட்டார்.
இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை முன்னெடுத்த பொலிசார், அதே நாளில் குறித்த பெண்மணியை சந்தேக வளையத்தில் கொண்டு வந்தனர்.
தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அந்த பெண்மணி, பல முறை தமது கணவரை கொல்ல முயன்றதும், ஒவ்வொருமுறையும் அதிர்ஷ்டவசமாக அந்த நபர் தப்பியதும் அம்பலமானது.
மட்டுமின்றி, சொந்த வீட்டை கொளுத்தும் முன்னர் வாடகை கொலையாளியை ஏற்பாடு செய்துள்ளதும் வெளிச்சத்துக்கு வந்தது.
இதனிடையே பொருளாதார நெருக்கடியே, கணவரை கொல்ல குறித்த பெண்ணை தூண்டியதாக கூறப்படுகிறது. ஆனால், மொத்த தரவுகளும் குறித்த பெண்மணிக்கு எதிராகவே இருந்தன.
இதனையடுத்து அவர் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விரிவான விசாரணையில், பல மோசடிகளில் ஈடுபட்டுள்ளதும், ஆவணங்களில் முறைகேடு நடத்தியதும் அம்பலமானது.
இந்த விவகாரத்தில் கைதாகி தற்போது சிறையில் இருக்கும் அவர், இறுதி தீர்ப்பை எதிர்நோக்கியுள்ளார்.