Tripathi ladoo: சுவையான திருப்பதி லட்டு.., வீட்டிலேயே இலகுவாக செய்யலாம்
திருப்பதி என்றாலே பெருமாள் மற்றும் திருப்பதி லட்டு இவை தான் முதலில் நினைவுக்கு வரும்.
இந்த லட்டு சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான கோயில் பிரசாதமாக இருக்கிறது.
திருப்பதி திருமலையில் மட்டுமே கிடைக்கும் இந்த சுவையான திருப்பதி லட்டு வீட்டிலேயே எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
- சர்க்கரை- 2 கப்
- அரிசி மா- ½ கப்
- பால்- ¼ லிட்டர்
- கடலை மா- 2 கப்
- நெய்- தேவையான அளவு
- முந்திரி- 1 கைப்பிடி
- திராட்சை- 1 கைப்பிடி
- ஏலக்காய் தூள்- 1 ஸ்பூன்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் ¼ கப் சர்க்கரை சேர்த்து அதில் அரிசி மா, பால் மற்றும் கடலை மாவை சலித்து சேர்த்து கெட்டியாக கலந்துக்கொள்ளவும்.
பின் ஒரு பாத்திரத்தில் மீதமுள்ள சர்க்கரை சேர்த்து மூழ்கின்ற அளவிற்கு தண்ணீர் சேர்த்து ஒரு கம்பி பதம் வரும்வரை பாகு காய்ச்சிக்கொள்ளவும்.
அடுத்து ஒரு வாணலை அடுப்பில் வைத்து அதில் பொறிக்க தேவையான அளவு நெய் சேர்த்து சூடுபடுத்தவும்.
பின்னர் இதில் கலந்து வைத்துள்ள மாவை பூந்தி தட்டில் சேர்த்து நெய்யில் பொறித்து எடுத்து அதனை சர்க்கரை பாகில் ஊறவைக்கவும்.
அனைத்தையும் பொறித்து எடுத்தபின் சர்க்கரை பாகில் சேர்த்து கலந்து அதில் 2 கைப்பிடி பூந்தியை மட்டும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து எடுத்து அனைத்தையும் ஒன்றாக சேர்த்து கலந்துகொள்ளவும்.
இறுதியாக இதில் நெய்யில் வறுத்த முந்திரி மற்றும் திராட்சை சேர்த்து கலந்து ஏலக்காய் தூள் சேர்த்து லட்டு பிடித்தால் சுவையான திருப்பதி லட்டு தயார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |