பெட் ரூம் சீன் இருக்கும்னு ஆசைப்பட்டேன்! கேவலமாக பேசிய மன்சூர் அலிகான்..கொந்தளித்த திரிஷா
நடிகர் மன்சூர் அலி கான் நேர்காணல் ஒன்றில் மோசமாக பேசியதற்கு திரிஷா கண்டனம் தெரிவித்து ட்வீட் செய்துள்ளார்.
மன்சூர் அலி கான்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'லியோ' திரைப்படம் வசூலைக் குவித்து வெற்றி பெற்றது.
இப்படத்தில் திரிஷா, அர்ஜுன், மன்சூர் அலி கான் உள்ளிட்ட ஏராளமான நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இந்த நிலையில் மன்சூர் அலி கான் பேசிய வீடியோ ஒன்று இணையத்தில் வைரலானது.
அதில் அவர் லியோ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தபோது திரிஷா உடன் படுக்கையறை காட்சி இருக்கும் என்று ஆசைப்பட்டதாக கூறினார்.
மேலும், அவருடன் ரேப் சீன் இருக்கும் என்று நினைத்ததாகவும், ஆனால் அவரை கண்ணில் காட்டாமல் அழைத்து சென்றுவிட்டார்கள் என்றும் ஆபாசமாக பேசியிருந்தார்.
The context ....??pic.twitter.com/n0ge3Qkzer
— Aryan (@chinchat09) November 18, 2023
திரிஷா கண்டனம்
இதுகுறித்து அறிந்த நடிகை திரிஷா தற்போது கண்டனம் தெரிவித்து பதிவிட்டுள்ளார்.
அவரது பதிவில், 'சமீபத்தில் திரு. மன்சூர் அலி கான் என்னைப் பற்றி கேவலமாகவும், அருவருக்கத்தக்க வகையிலும் பேசிய வீடியோ என் கவனத்திற்கு வந்தது. இதை நான் கடுமையாகக் கண்டிக்கிறேன். மேலும் இது பாலியல் ரீதியான பாகுபாடு, அவமரியாதை, பெண் வெறுப்பு மற்றும் மோசமான ரசனையைக் காண்கிறேன்.
அவர் ஆசைப்படலாம் ஆனால் நான் அவரைப் போன்ற மோசமான ஒருவருடன் சேர்ந்து நடிக்காததற்கு நிம்மதியடைகிறேன். அத்துடன் திரையுலக வாழ்வில் அது நடக்காமல் பார்த்துக் கொள்கிறேன். இவரைப் போன்றவர்கள் மனித குலத்திற்கு கெட்ட பெயரை ஏற்படுத்துகிறார்கள்' என தெரிவித்துள்ளார்.
A recent video has come to my notice where Mr.Mansoor Ali Khan has spoken about me in a vile and disgusting manner.I strongly condemn this and find it sexist,disrespectful,misogynistic,repulsive and in bad taste.He can keep wishing but I am grateful never to have shared screen…
— Trish (@trishtrashers) November 18, 2023
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |