உலகக்கிண்ணத்தில் 150 ரன்னில் இந்தியா இமாலய வெற்றி! 110 ரன்னுடன் 3 விக்கெட் வீழ்த்தி த்ரிஷா அபாரம்
ஸ்கொட்லாந்துக்கு எதிரான மகளிர் U19 உலகக்கிண்ணப் போட்டியில், இந்திய அணி 150 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது.
கோலாலம்பூரில் நடந்த போட்டியில் இந்தியா மற்றும் ஸ்கொட்லாந்து அணிகள் மோதின. முதலில் ஆடிய இந்திய அணி 1 விக்கெட்டுக்கு 208 ஓட்டங்கள் குவித்தது. கொன்கடி த்ரிஷா 59 பந்துகளில் 4 சிக்ஸர், 13 பவுண்டரிகளுடன் 110 ஓட்டங்கள் குவித்தார்.
TRISHA TON 💯
— Women’s CricZone (@WomensCricZone) January 28, 2025
G Trisha becomes the first player to score a century in the ICC Women's T20 World Cup history.#U19WorldCup pic.twitter.com/kfgiknssXS
பின்னர் களமிறங்கிய ஸ்கொட்லாந்து அணி ஆயுஷி ஷுக்லா, த்ரிஷா மற்றும் வைஷ்ணவி ஷர்மா ஆகியோரும் அபார பந்துவீச்சில் சீட்டுக்கட்டுபோல் விக்கெட்டுகளை இழந்தது.
14 ஓவர்கள் தாக்குபிடித்த ஸ்கொட்லாந்து அணி 58 ஓட்டங்களுக்கு சுருண்டது. பிப்பா கெல்லி, எம்மா வால்சின்ஹம் தலா 12 ஓட்டங்கள் எடுத்தனர். ஆயுஷி 4 விக்கெட்டுகளும், த்ரிஷா மற்றும் வைஷ்ணவி தலா 3 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
110 ஓட்டங்கள் விளாசியதுடன், 3 விக்கெட்டுகளையும் வீழ்த்திய கொன்கடி த்ரிஷா (Gongadi Trisha) ஆட்டநாயகி விருது பெற்றார்.
History-maker G Trisha takes away the POTM award! 🏆
— Women’s CricZone (@WomensCricZone) January 28, 2025
If the unbeaten century wasn't enough, Trisha claimed a three-wicket haul to make things sweeter! 😮💨#U19WorldCup pic.twitter.com/L9P81Uwy6z
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |