என் மகன் இறந்துவிட்டான்: கண்ணீருடன் த்ரிஷா
கிறிஸ்துமஸ் தினமான இன்று தன்னுடைய மகன் இறந்துவிட்டதாக நடிகை த்ரிஷா சோகமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகையாக வலம்வந்தவர் த்ரிஷா. தற்போது விடாமுயற்சி, குட் பேட் அக்லி மற்றும் சூர்யா 45 படத்தில் நடித்து வருகிறார்.
கடந்த 2012ம் ஆண்டு முதல் ஸோரோ என்ற நாயை செல்லமாக வளர்த்து வந்தார், தன்னுடைய மகன் என்றே குறிப்பிடுவார்.
இந்நிலையில் இன்று காலை ஸோரோ உயிரிழந்துவிட்டதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அதில், என்னுடைய மகன் ஸோரோ இன்று காலை உயிரிழந்துவிட்டான், இதற்கு மேல் என் வாழ்க்கை வெறுமை என்பது என்னுடன் நெருக்கமாக பழகியவர்களுக்கு தெரியும், அதிர்ச்சியில் இருக்கிறேன், பணியில் இருந்து சிறிது கால் ஓய்வெடுக்கவிருக்கிறேன் என தெரிவித்துள்ளார்.