இரண்டு தடுப்பூசி செலுத்தியும் '96' திரைப்பட நடிகைக்கு கொரோனா! வருத்தத்தில் ரசிகர்கள்
நடிகை திரிஷாவிற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
கொரோனா தொற்று மூன்றாவது அலை காரணமாக கடந்த ஒருவாரமாக தமிழகம் முழுவதும் கொரோனா நோய் தொற்று எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
கொரோனா தொற்று சாமானிய மக்களை மட்டுமின்றி திரையுலக பிரபலங்களையும் தாக்கி வருகிறது. மாணவர்கள், நடிகர், நடிகைகள் என அனைவரும் கொரோனாவுக்கு இலக்காகி வருகின்றனர்.
அந்த வகையில் சமீபத்தில் நடிகர் சத்யராஜ், மகேஷ்பாபு, மீனா போன்ற நடிகர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தற்போது நடிகை த்ரிஷாவுக்கு கொரோனா தொற்று பாதித்திருப்பதாக அவரே அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து த்ரிஷா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், அனைத்து முன்னெச்சரிக்கைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுத்தாலும் புத்தாண்டுக்கு சற்று முன்பு எனக்கு கொரோனா தொற்று உறுதி ஆனது.
எனக்கு அறிகுறிகள் இருந்தன. தடுப்பூசி எடுத்துக்கொண்டதன் விளைவாக எனக்கு பெரிதாக பாதிப்பு ஏதும் ஏற்படவில்லை. அதற்காக நான் நன்றி கூறுகிறேன்.
விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவேன் என்ற நம்பிக்கை உள்ளது. தயவு செய்து அனைவரும் முகக்கவசம் அணியுங்கள். நான் நலம்பெற வேண்டும் என பிரார்த்தனை செய்யும் குடும்பம், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு மனமார்ந்த நன்றி எனக் குறிப்பிட்டுள்ளார்.