த்ரிஷா திருமணத்தை வெறுப்பதற்கு இந்த 2 நடிகர்கள்தான் காரணம்? ரகசியம் சொன்ன பிரபலம்
நடிகை த்ரிஷா திருமணம் செய்யாமல் இருப்பதற்கு இந்த 2 நடிகர்கள்தான் காரணம் என்று பிரபல நடிகர் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நடிகை த்ரிஷா
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை த்ரிஷா. கதாநாயகிகளால் சினிமாத்துறையில் நீடிக்க முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியவர் நடிகை த்ரிஷா. நடிகை த்ரிஷா 1983-ம் ஆண்டு மே மாதம் 4ம் தேதி பிறந்தார்.
பள்ளி காலத்திலேயே மாடலிங் துறையில் கால்பதித்த த்ரிஷா, மிஸ் சேலம், மிஸ் மெட்ராஸ் பட்டங்களை வென்றவர்.
தமிழ் சினிமாவில்‘லேசா லேசா’ திரைப்படத்தில் மூலம் ஒப்பந்தமானார் த்ரிஷா. ஆனால் அதற்கு முன்னதாகவே ‘மெளனம் பேசியதே’ வெளியானது. முன்னணி நடிகர்களான அஜீத், விஜய், சூர்யா, விக்ரம் போன்ற நடிகர்களுடன் நடித்து முன்னணி நடிகையாக வலம் வருகிறார். தற்போது நடிகர் விஜய்க்கு ஜோடியாக ‘லியோ’ படத்தில் நடித்து வருகிறார்.
ரகசியத்தை போட்டுடைத்த பிரபல நடிகர்
இந்நிலையில், சினிமா நடிகைகள் பற்றிய அந்தரங்க விஷயங்களைப் பற்றி யூடியூப்பில் பேசி சர்ச்சையில் சிக்கிகும் பிரபல நடிகரும், பத்திரிகையாளருமான பயில்வான் ரங்கநாதன், திரிஷா திருமணம் செய்ய மறுப்பதற்கான காரணத்தை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் பேசுகையில்,
நடிகை திரிஷா திருமணம் செய்யாமல் முரட்டு சிங்கிளாக வலம் வருவதற்கு நடிகர்கள் சிம்புவும், ராணாவும் தான் காரணம். இவர்கள் இருவரும் திரிஷாவை காதலித்து ஏமாற்றிவிட்டனர். இதனால், திரிஷாவுக்கு திருமணத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. அதனால்தான், அவர் 40 வயதை நெருங்கிய நிலையிலும் முரட்டு சிங்கிளாக இருந்து வருகிறார் என்றார்.