இளவரசர் ஆண்ட்ரூவுக்கு புதிய சிக்கல்
New trouble for Andrew, as police probe Jeffrey Epstein's stay at King's Balmoral Castle: கோடீஸ்வரர் ஜெஃப்ரி எப்ஸ்டீனை பால்மோரல் மாளிகையில் தங்கவைத்த விடயம் தொடர்பில் பொலிசார் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.
இளவரசர் ஆண்ட்ரூவுக்கு புதிதாக சிக்கல் ஒன்று துவங்கியுள்ளது.

புதிய விசாரணை துவக்கம்
இளவரசர் ஆண்ட்ரூ, ஏராளம் இளம்பெண்களையும் சிறுமிகளையும் சீரழித்த அமெரிக்கக் கோடீஸ்வரரான ஜெஃப்ரி எப்ஸ்டீன் என்பவருடன் தொடர்பிலிருந்த விடயம் அவருக்கு பல பிரச்சினைகளை உருவாக்கியுள்ளது.

இந்நிலையில், எப்ஸ்டீன் தொடர்பில் புதிய விசாரணை ஒன்றை பொலிசார் துவக்கியுள்ளதால், ஆண்ட்ரூவுக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ, அவரது முன்னாள் மனைவியான சாரா ஆகியோருக்கு எப்ஸ்டீனுடன் தொடர்பு இருந்ததைக் குறித்த விடயம், அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட எப்ஸ்டீன் கோப்புகள் என்னும் ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

அதைத்தொடர்ந்து, இளவரசர் ஆண்ட்ரூ கைது செய்யப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது.
இந்நிலையில், எப்ஸ்டீனையும் அவரது காதலியான கிஸ்லெய்ன் மேக்ஸ்வெல்லையும், மன்னர் சார்லசுக்கு சொந்தமான பால்மோரல் மாளிகையில் இளவரசர் ஆண்ட்ரூ தங்கவைத்த விடயம் தொடர்பில் அதிகாரிகள் புதிதாக விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளார்கள்.

மேலும், சில பெண்களையும் எப்ஸ்டீன் பால்மோரல் மாளிகைக்கு கடத்திவந்ததாகவும் கூறப்பட்ட நிலையில், அது தொடர்பிலும் அதிகாரிகள் விசாரணை துவக்கியுள்ளார்கள்.