கனடாவில் நாடு கடத்தப்படவுள்ள இந்தியர்! எதற்காக?
கனடாவில், இந்திய சாரதி ஒருவரால் நிகழ்ந்த விபத்து, 16 பேரின் உயிரை பலிவாங்கியதுடன், 13 பேர் படுகாயமடைய காரணமாக அமைந்தது.
2018ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி, Jaskirat Singh Sidhu என்ற இந்தியர் ஓட்டிய ட்ரக், பேருந்து ஒன்றின் மீது மோதியது.
அந்த பேருந்தில் Broncos ஜூனியர் ஹாக்கி அணியைச் சேர்ந்த இளைஞர்கள் பயணித்தனர். அந்த கோர விபத்தில் 16 பேர் கொல்லப்பட்டதுடன், 13 பேர் படுகாயமடைந்தனர்.
ஆகவே, Sidhuவுக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. தான் பயணிக்கும் சாலைக்கு குறுக்கே மற்றொரு சாலை குறுக்கிடுவதாக அறிவிப்பு பலகைகளும், மின்னும் விளக்குகளுடன் சிக்னல்களும் இருந்தும், தான் பிரேக் பிடிக்கவில்லை என ஒப்புக்கொண்ட Sidhu, தண்டனையையும் எந்த எதிர்ப்பும் இன்றி ஏற்றுக்கொண்டார்.
Sidhu கனடாவில் நிரந்தர வாழிட உரிமம் பெற்றவர். பெடரல் சட்டத்தின்படி, நிரந்தர வாழிட உரிமம் பெற்ற ஒருவர் குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்டு குறைந்தபட்சம் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பெற்றால், தங்கள் தண்டனைக்காலத்திற்குப் பின் அவர் நாடு கடத்தப்படலாம்.

ஆனால், Sidhu ஏற்கனவே தன் குற்றத்திற்காக கடுமையாக தண்டிக்கப்பட்டுவிட்டார், எனவே அவரை நாடு கடத்தக்கூடாது என அவரது சட்டத்தரணி நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்தார்.
இந்நிலையில், அந்த கோரிகையை கனேடிய எல்லை பாதுகாப்பு ஏஜன்சி நிராகரித்துள்ளது.
ஆகவே, Sidhu புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்திடம் ஒப்படைக்கப்பட உள்ளார். அந்த ஆணையம் Sidhuவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பில் முடிவெடுக்க உள்ளது.
விடயம் என்னவென்றால், புலம்பெயர்தல் மற்றும் அகதிகள் ஆணையத்தின் முன் ஒருவர் நிறுத்தப்பட்டால், கிட்டத்தட்ட அது நாடுகடத்துவது என முடிவானது போலத்தான் என்கிறார் Sidhuவின் சட்டத்தரணியான Michael Greene! 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                                                 
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        