கடன் வாங்கி டிரக் வாங்கிய விஜய் சங்கேஷ்வர் : இன்று 5700 வாகனங்களுக்கு சொந்தக்காரர் ஆனது எப்படி?
1976 இல் ஒரு டிரக் மூலம் தனது வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கி இன்று தேசம் முழுக்க அறியப்பட்டவர் தான் பிரபல தொழிலதிபராகிய விஜய் சங்கேஷ்வர்.
யார் இந்த விஜய் சங்கேஷ்வர்?
கர்நாடக மாநிலம் கதக் மாவட்டத்தில் கடந்த 1950, ஆகஸ்ட் 2 ஆம் திகதி பிறந்தவர் தான் விஜய் சங்கேஷ்வர். அவரது தந்தை அச்சகம் தொழில் செய்பவர்.
ஆனால் இவருக்கு போக்குவரத்து தொடர்பான தொழில் செய்வதில் விருப்பம் அதிகம்.
Entrepreneur India
ஆகவே ஒரு வெற்றிகரமான வணிகத்தை நிறுவ வேண்டும் என்ற கனவுகளுடன்,கடன் வாங்கிய பணத்தில் ஒரு டிரக்கை வாங்கினார்.
ஒரு டிரக்கிலிருந்து வணிகத்தை பெரிதாக்குவது என்பது சாத்தியமற்றதாக இருக்கலாம். ஆனால் இவர் அதை சாத்தியமாக்கினார்.
ஒரு டிரக்கில் தொடங்கி இப்போது அவரிடம் சுமார் 5700 வாகனங்கள் உள்ளன. இந்தியாவின் டிரக்கிங் மன்னன் என்று அழைக்கப்படும் விஜய் சங்கேஷ்வர், 1976 ஆம் ஆண்டு ஒரு டிரக் மூலம் தனது தொழிலை ஆரம்பித்தார்.
தொழில் தொடங்கிய விஜய் சங்கேஷ்வர்
பல்வேறு சவால்களை எதிர்கொண்டு தொழிலை ஆரம்பித்துள்ளார். ஓட்டுநர்கள், வாடிக்கையாளர்கள் என பல சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி நிதி சார்ந்த சிக்கல்கலையும் அவர் எதிர்கொண்டுள்ளார்.
பல சிக்கல்கள் எற்பட்டாலும் மனம் தளராமல், 1983 இல் விஜயானந்த் ரோட் லைன்ஸ் லிமிடட் எனும் போக்குவரத்து நிறுவனத்தை ஆரம்பித்தார்.
அந்தக்காலக்கட்டத்தில் அவரிடம் 150 டிரக்குகள் இருந்துள்ளன. அப்படியே கொரியர் நிறுவனம், பயணிகள் பேருந்து சார்ந்த முயற்சி நிறுவனத்தை பெரிதாக்கினார்.
கடந்த 1994 இல் VRL குழுமத்தை தொடங்கினார். தற்போது 23 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்கள் என நாட்டில் அவரது விஆர்எல் குழுமம் இயங்கி வருகிறது.
இன்று இந்தியாவின் பணக்காரர்களில் விஜய் சங்கேஷ்வரும் ஒருவர். இவரது நிறுவனமானது கடந்த ஐந்து ஆண்டுகளில் பங்குச் சந்தையில் 115 சதவீதம் லாபம் ஈட்டியுள்ளது.
இந்நிறுவனத்தின் மொத்த சந்தை மதிப்பானது ரூ.6142 கோடியாகும்.
மேலும் இவரது வாழ்க்கைப் பயணமானது 'விஜயானந்த்' என்ற திரைப்படம் மூலமாக வெளியாகியுள்ளது. இவர் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
President Kovind presents Padma Shri to Dr Vijay Sankeshwar for Trade and Industry. He is the chairman of VRL Group and is also known for his social work and philanthropy. pic.twitter.com/oNWqrTk2Mw
— President of India (@rashtrapatibhvn) November 8, 2021
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |