கனேடிய தேர்தலில் சீனா விளையாடுகிறது: பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றச்சாட்டு
சீன ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பு அடையாளம் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தகவல்.
11 வேட்பாளர்களை சீனா ஆதரித்ததாக அதிகாரிகள் அறிவிப்பு.
கனேடியத் தேர்தலில் சீனா தலையிட முயற்சிப்பதாக கனடா நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியுள்ளார்.
கனேடிய உளவுத்துறையின் அறிக்கைகளை அடிப்படையாக கொண்டு சமீபத்திய தேர்தலில், சீன ஆதரவு வேட்பாளர்களின் இரகசிய வலையமைப்பு அடையாளம் காணப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் அறிக்கைகளை வெளியிட்டு இருந்தன.
அத்துடன் உள்ளூர் ஒளிபரப்பு செய்தி நிறுவனமான குளோபல் நியூஸ், பெயரிடப்படாத உளவுத்துறை அதிகாரிகளை மேற்கோள் காட்டி, சீனா கனேடிய தேர்தல் வேட்பாளர்களுக்கு நிதி வழங்கியதாகவும், சீன செயல்பாட்டாளர்கள் பல கனேடிய தேர்தல் வேட்பாளர்களுக்கு பிரச்சார ஆலோசகர்களாக செயல்பட்டதாகவும் தெரிவித்தது.
GETTY IMAGES
மேலும் கடந்த 2019ம் ஆண்டின் பெடரல் தேர்தலில் குறைந்தது 11 வேட்பாளர்களை சீனா ஆதரித்ததாக அதிகாரிகள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்து இருந்தனர்.
இந்நிலையில் திங்கட்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ, எங்கள் தேர்தல் செயல்முறைகள் மற்றும் அமைப்புகளின் ஒருமைப்பாட்டை பலப்படுத்த நாங்கள் குறிப்பிடத்தக்க நடவடிக்கைகளை எடுத்துள்ளோம், இந்த போராட்டத்தில் நமது ஜனநாயகம் மற்றும் நிறுவனங்களில் வெளிநாட்டு தலையீட்டுக்கு எதிராக தொடர்ந்து முதலீடு செய்வோம் என தெரிவித்தார்.
Bloomberg
கூடுதல் செய்திகளுக்கு: ராணி கமிலாவுக்கு வழங்கப்பட்டுள்ள மற்றொரு அங்கீகாரம்: அரண்மனை வெளியிட்டுள்ள புதிய சின்னம்
உலகெங்கிலும் உள்ள நாடுகள், அது சீனாவாக இருந்தாலும் சரி, மற்ற நாடுகளாக இருந்தாலும் சரி துரதிர்ஷ்டவசமாக எங்கள் ஜனநாயகத்தின் மீது தொடர்ந்து ஆக்கிரமிப்பு விளையாட்டை நடத்தி வருவதை பார்த்து வருகிறோம் என பிரதமர் ஜஸ்டின் ரூட்டோ குற்றம் சாட்டியுள்ளார்.