காதலி Katy Perry உடன் ஜப்பானுக்கு பறந்த கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ
கனடாவின் முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவும் அமெரிக்க பாடகி கேற்றி பெர்ரியும் தங்கள் உறவை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
ஜப்பானிய பிரதமர்
இந்த வாரம் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் முன்னாள் ஜப்பானிய பிரதமர் ஃபுமியோ கிஷிடா மற்றும் அவரது மனைவி யூகோவுடன் இணைந்து இருவரும் மதிய உணவு விருந்தில் கலந்துகொண்டுள்ளனர்.

வெளியான புகைப்படம் ஒன்றில், இரு தம்பதிகளும் ஒரு கிறிஸ்துமஸ் மரத்திற்கு முன்னால் நின்று புகைப்படத்திற்கு முகம் காட்டுகின்றனர். சமூக ஊடகத்தில் ஃபுமியோ கிஷிடாவுக்கு நன்றி தெரிவித்துள்ள ட்ரூடோ,
கேற்றி மற்றும் தாமும் உங்களுடனும் யூகோவுடனும் விருந்தில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி என ட்ரூடோ குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஃபுமியோ, உங்கள் நட்புக்கும், சர்வதேச விதிகள் சார்ந்த ஒழுங்கு மற்றும் அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்திற்கான உங்கள் தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கும் நன்றி எனவும் ட்ரூடோ பதிவு செய்துள்ளார்.
ஜப்பான் சந்திப்பு
ஜூலை மாதத்தில் வதந்திகள் பரவத் தொடங்கியதிலிருந்து, ட்ரூடோ மற்றும் கேற்றியின் உறவு நிலை குறித்த உறுதிப்படுத்தலுக்கு மிக நெருக்கமான விடயம் இந்த ஜப்பான் சந்திப்பு என்றே கூறப்படுகிறது.

டோக்கியோவில் ட்ரூடோவும் பெர்ரியும் கைகோர்த்து நிற்கும் புகைப்படங்களும் கவனத்தை ஈர்த்து வருகின்றன. முன்னாள் கனேடிய பிரதமர் தனது சிறந்த வாழ்க்கையை தற்போது வாழ்ந்து வருவதாக சமூக ஊடக பயனர்கள் கூறுகின்றனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |